தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.2.5 கோடி மோசடி அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர், மனைவி மீது வழக்கு

16 Nov 2025, 3:30 pm
ரூ.2.5 கோடி மோசடி  அண்ணா பல்கலை. முன்னாள்  துணைவேந்தர், மனைவி மீது வழக்கு
<p><strong>ரூ.2.5 கோடி மோசடி &nbsp;அண்ணா பல்கலை. முன்னாள் &nbsp;துணைவேந்தர், மனைவி மீது வழக்கு</strong></p> <p>சென்னை, நவ. 16- அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் &nbsp;துணைவேந்தர் கலாநிதி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி மீது சென்னை மயி லாப்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த &nbsp;தனசேகர் என்பவர், தனது குடும்ப &nbsp;உறுப்பினர்கள் மற்றும் உறவினர் களுக்கு அரசு வேலை பெற்றுத் தர வேண் டும் என்ற நோக்கில், தான் நன்கு அறிந்தி ருந்த சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தின் முன்னாள் துணைவேந்தர் கலா நிதி என்பவரிடம் சுமார் இரண்டரை கோடி &nbsp;ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். தன சேகரிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்ட கலாநிதி, உறுதியளித்தபடி பல &nbsp;ஆண்டுகளாக யாருக்கும் அரசு வேலை வாங்கிக் கொடுக்காமல் காலத்தைக் கடத்தி வந்துள்ளார். மேலும், தனசேகருக்குச் சொந்தமான நிலத்தின் பத்திரங்களையும் கலாநிதி பெற்றுக் கொண்டுள்ளார். சில காலத் திற்குப் பிறகு, அந்த நிலப் பத்திரம் தொலைந்து விட்டதாகக் கூறி கலாநிதியே &nbsp;காவல் நிலையத்தில் புகாரும் அளித் துள்ளார். தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த &nbsp;தனசேகர், இது குறித்து நேரடியாக &nbsp;காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அத்துடன், சென்னை சைதாப் பேட்டை 18 ஆவது நீதிமன்றத்திலும் அவர் &nbsp;ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். தன சேகரின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யு மாறு காவல்துறையினருக்கு உத்தர விட்டது. நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலின் &nbsp;பேரில், சென்னை மயிலாப்பூர் காவல்து றையினர், முன்னாள் துணைவேந்தர் கலா நிதி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி &nbsp;ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் &nbsp;வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.