விஜய் ராகுல் ரோட்ஷோவில் விதிமீறல்: 11 பேர் மீது வழக்கு
10 Apr 2026, 5:30 am

விஜய் ராகுல் ரோட்ஷோவில் விதிமீறல்: 11 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதாக கூறி நிர்வாகிகள் 11 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தனி விமானம் மூலம் தூத்துக்குடி வந்திறங்கிய விஜய், கட்சி நிர்வாகிகள் வரவேற்புக்குப் பின்னர் பிரச்சார வேனில் நெல்லை நோக்கி பயணமானார். பிரச்சாரப் பயணத்தின்போது தொண்டர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், நெல்லை மற்றும் வாகைகுளம் பகுதியில் தொண்டர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது.

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது விழுந்து பின்வந்த வாகனங்கள் மோதியதில் 7 பேர் காயமடைந்தனர். ஏற்கனவே கூட்டம் நிறைந்த பிரச்சார சாலையில் சாலையைக் கடக்க முயன்ற ஒருவரை அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. ஒருகட்டத்தில் மொத்தமாக விதிமீறலில் 11 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.