தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Dec 2025, 5:05 pm
சென்னை விரைவு செய்திகள்

53வயது நபருக்கு குருத்தெலும்பு மாற்று சிகிச்சை

சென்னை,டிச.28- சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில், 53 வயது நோயாளி ஒருவருக்கு ‘ஐந்தாம் தலைமுறை ஆட்டோகிராஃப்ட் குருத்தெலும்பு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பணி புரியும் தமிழகத்தை சேர்ந்த இந்த நபரின் சொந்த குருத்தெலும்பு மற்றும் பிளாஸ் மாவை பயன்படுத்தி ஒரே கட்டமாக செய்யப் படும் நவீன ‘டே கேர்’ முறையாகும். இச்சிகிச்சை முடிந்த உடனே நோயாளிகள் எவ்வித ஊன்றுகோலோ அல்லது செயற்கை உறுப்புகளோ இன்றி தாமாகவே நடக்க முடியும்.  இதனால் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைத் தவிர்க்க முடிவதுடன், இயற்கையான மூட்டுகளும் பாதுகாக்கப்படு கின்றன. ஆறு ஆண்டுகளாக மூட்டுவலி யால் அவதிப்பட்ட அந்த நபர், தற்போது வலி யிலிருந்து முழு நிவாரணம் பெற்றுள்ளார். காயங்கள் மற்றும் மூட்டு தேய்மானத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாகும் என்று அவருக்கு சிகிச்சை அளித்த எலும்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் நந்த்குமார் சுந்தரம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னையில் போராட்டம் நடத்திய  இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னை,டிச.28- சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சென்னையில் ஞாயிறன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் கெடுபிடி காரணமாக ஆட்சியர் அலு வலகம் முன்பு  போராட்டத் தில் ஈடுபட்டனர். காலை 11.15 மணியள வில் ஆசிரியர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போரா ட்டம் நடைபெறும் ஆட்சி யர் அலுவலகத்துக்கு சாரை  சாரையாக வந்தனர். திடீ ரென்று அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை யோரம் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத் தில் கலந்து கொண்டனர். இத னால் அங்கு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக் கப்பட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 500க்கும் மேற் பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட் டத்தின்போது 3 ஆசிரியர் கள் மயங்கி விழுந்தனர்.இத னால் பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.