‘விளைச்சல் இருந்தும், விலை இல்லை’ கேரட் விவசாயிகள் விரக்தி
19 Nov 2025, 3:33 pm
<p><strong>‘விளைச்சல் இருந்தும், விலை இல்லை’ கேரட் விவசாயிகள் விரக்தி</strong></p>
<p>உதகை, நவ.19- ‘ஆரஞ்சு கோல்ட்’ என்றழைக்கப்படும் கேரட், நீலகிரியில் நல்ல விளைச்சல் இருந்தும், உரிய விலை இல்லாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்த படியாக மலைக்காய்கறிகள் சாகுபடியில் அதிகள விலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கு விளையும் மலைக்காய்கறிகள் சென்னை, மதுரை, திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்க ளுக்கும் கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட மாநிலங் களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலைக் காய்கறிகளில் ‘ஆரஞ்சு கோல்ட்’ என்றழைக்கப்ப டும் கேரட், உதகையின் அடையாளங்களில் ஒன் றாக உள்ளது. தோட்டக்கலைத்துறை புள்ளிவிவ ரப்படி நீலகிரியில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் கேரட் பயிரிடுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக கேரட்டுக்கு நிலை யில்லா விலை இருந்தாலும், அறுவடை நாட்களுக் குள் கட்டாய அறுவடை செய்ய வேண்டிய சூழ் நிலை உள்ளது. எனவே மற்ற பயிர்களைப்போல இல்லாமல் கேரட் பயிருக்கு விலை இருந்தாலும், இல்லா விட்டாலும் அறுவடை செய்யப்படும். இந்நிலை யில், ஒவ்வோரு ஆண்டும் ஜூன், ஜூலையில் மலைக் காய்கறிகளின் விலையில் சரிவு ஏற்பட்டு மீண்டும் விலை அதிகரிக்கும். ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் அதிகமாக கொள்முதல் செய்யப்பட் டால் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகிறது. ஆனால் இந்த ஆண்டு 10 மாதங்களாக சராசரி யாக கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை மட்டுமே விற்ப னையாகிறது. திடீரென்று ஒரு சில நாட்கள் மட்டும் இடையில் ரூ.70 அல்லது ரூ.80க்கு கொள்முதல் விலைக்கு சென்று மறுநாள் திடீரென விலை குறைந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கேரட் விலை கிலோவுக்கு ரூ.90 வரை விற்பனையான நிலையில், கடந்த சில மாதங்க ளாக விலை குறைந்து கொள்முதல் விலையாக ரூ.30 முதல் 35 வரை மட்டுமே போகிறது. கேரட் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவு ஏற் படுகிறது. நீலகிரியில் பெரும்பாலான விவசாயிக ளுக்கு சொந்த நிலம் இல்லாததால் குத்தகைக்கு இடம் வாங்கி விவசாயம் செய்கிறோம். ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் வரை செலவு ஏற்படு கிறது. குறிப்பாக ஒரு ஏக்கருக்கு விதைக்கு மட்டும் 50 ஆயிரம் செலவாகிறது. எனவே குறைந்தபட்சம் ஒரு கிலோவுக்கு ரூ.50 கிடைத்தால்தான் கட்டுப் படியாகும். தற்போது கேரட் சாகுபடி நன்றாக இருப்பதால் அடுத்த ஒரு சில நாட்களில் இன்னும் வரத்து அதிகரித்து இதைவிட விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் மாற்று விவசாயத்தை கையாள வேண்டியுள்ளது, என்றனர்.</p>
<p> </p>
