ஓமன் கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் மாயம்
12 Jul 2026, 9:08 pm
<p><strong>ஓமன் கடல் பகுதியில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்: இந்தியர் மாயம்</strong></p><p>புதுதில்லி, ஜூலை 12 - ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. அமெரிக்கா ஈரான் மீதும், ஈரான் அமெரிக்க ராணுவ தளங்களை கொண்ட கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இத னால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள் ளது. அமெரிக்காவின் தாக்கு தலுக்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து, ஈரான் ஹோர்மூஸை மீண்டும் மூடியுள்ளது. இந்நிலையில், ஹோர் மூஸ் அருகே ஓமன் கடற்க ரைக்கு அப்பால் ஞாயிறன்று வணிகக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி யுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளது. இக்கப்பலில் மொத்தம் 11 இந்தியர்கள் பணியில் இருந்த னர். அவர்களில் 10 பேர் பத்தி ரமாக மீட்கப்பட்டுள்ளனர், ஒரு வர் மட்டும் மாயமாகியுள்ளார் என இந்திய வெளியுறவு அமை ச்சகம் தெரிவித்துள்ளது. </p>
