சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>சாலையில் தீப்பிடித்து எரிந்த கார் </strong></p>
<p>கோவை, டிச.31- நவக்கரை அருகே சாலை யில் சென்ற கார் திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந் தவர் சந்தோஷ் (31). இவர் புதனன்று தனது குடும்பத்து டன் கோவை வழியாக கேர ளாவிற்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எட்டிமடை அடுத்த நவக்கரை அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து லேசாக புகை வர ஆரம்பித்தது. இத னால் சுதாரித்துக் கொண்ட சந்தோஷ் உடனடியாக காரை நிறுத்தி குடும்பத்துடன் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது. இதனி டையே அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தனர். அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் கார் முழுமையாக தீக்கிரையானது. இச்சம்பவம் தொடர்பாக கே.ஜி சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
