கார் தீப்பிடித்து விபத்து: இளைஞர் பலி
8 Jan 2026, 2:44 pm
<p><strong>கார் தீப்பிடித்து விபத்து: இளைஞர் பலி</strong></p>
<p>கோவை, ஜன.8- திருமலையாம்பாளை யம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் எரிவாயு குழாய் மீது மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் இளைஞர் உயிரி ழந்தார். கோவை குளத்துப் பாளையம் அம்மாவாசை கவுண்டர் வீதியைச் சேர்ந்த வர் நாகரத்தினம் மகன் விமல்ராஜ் (22). இவர் கோவை சாய்பாபா காலணி பகுதியில் உள்ள “ஆனைமலை டொயோடா” நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலை யில் கோவை எட்டிமடை பகுதியில் நடைபெற்ற கார் விற்பனை முகாமில் கலந்து கொள்ள இந்த நிறுவனம் சார்பில் சோதனை ஓட்ட காரான “டொயோடா அர்பன் க்ரூசர் ஹட்ரைடர்” என்ற காரை விமல்ராஜ், மற்றும் அவருடன் பணியாற்றும் ஆகாஷ் (22) ஆகிய இருவரும் புதனன்று காலை 10 மணியளவில் எடுத்து வந்தனர். இரவு விற்பனை முகாம் நிறைவடைந்த நிலையில் அங்கிருந்து கிளம்பியதாக தெரிகிறது. அப் போது ஆகஷின் நண்பரான எட்டிமடையை சேர்ந்த முரளி (24), என்பவரும் இவர்களுடன் காரில் வந்தார். பின்னர் சாய்பாபா காலனி நோக்கி காரில் சென்றனர். அப்போது ஆகாஷ் காரை ஓட்டியுள்ளார். கார் எட்டிமடை பிரிவு அருகே வந்த போது, திடிரென சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த விஜய குமார் (30) என்பவர் மீது காரை மோதியுள்ளனர். பின்னர் அங்கிருந்து வேகமாக திருமலையம்பாளையம் - காளியா புரம் சாலையில் தப்பிச் சென்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக வைத்திருந்த குழாய் மீது பயங்கர மாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரியத் துவங்கி யது. உடனடியாக காரில் இருந்த ஆகாஷ், முரளி காரை விட்டு இறங்கி தப்பினர். ஆனால் படுகாயமடைந்த விமல்ராஜ் காரில் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையி னர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் உள்ளே சிக்கிய விமல்ராஜ் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார் காயமடைந்த ஆகாஷ், முரளி ஆகியோரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.</p>
