அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
29 May 2026, 11:43 pm
<p><strong>அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்</strong></p><p>உளுந்தூர்பேட்டை, மே 29- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அரசு பேருந்து மீது கார் மோதி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்ப வம் காரணமாகச் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி மணிகண்டன் என்பவர் ஓட்டிச் சென்ற கார், குமார மங்கலம் ஜி.எஸ்.டி சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டை மீது ஏறி எதிர்திசை சாலைக்குள் புகுந்தது. அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து மீது அந்தப் பேருந்து நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் கார் மற்றும் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் மற்றும் போலீசார், காய மடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எலவனாசூர்கோட்டை போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப் படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
