முந்தய பக்கம்

விமானி ஸ்மித் மச்சாருக்கு எம்.ஏ.பேபி பாராட்டு

2 Oct 2026, 9:55 pm
விமானி  ஸ்மித் மச்சாருக்கு எம்.ஏ.பேபி பாராட்டு
<p><strong>விமானி ஸ்மித் மச்சாருக்கு எம்.ஏ.பேபி பாராட்டு</strong></p><p>துபாயில் இருந்து டெல் அவிவ் (இஸ்ரேல்) நோக்கிச் சென்ற ‘ப்ளைதுபாய்’ விமானத்தில் துணை விமானி தாக்கியபோதும், 170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றி இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் பெரும் வீரதீரத்துடன் செயல்பட்டுள்ளார். இந்நிலையில், இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”170 பயணிகளை எப்.இசட்.1073 விமானத்தில் கேப்டன் ஸ்மித் மச்சார் நடுவானில் காட்டிய அசாதாரண வீரம், நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன் ஒரு பேரழிவையும் தடுத்துள்ளது. படுகாயமடைந்த நிலையிலும் அவர் காட்டிய துணிச்சலையும் சமயோசிதமான புத்திக் கூர்மையையும் போற்றுகிறேன். அவர் விரைவில் குணமடைந்து, என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என எம்.ஏ.பேபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram