தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேமிப்பை உறிஞ்சும் முதலாளித்துவச் சந்தை!

yesterday
சேமிப்பை உறிஞ்சும் முதலாளித்துவச் சந்தை!

சேமிப்பை உறிஞ்சும் முதலாளித்துவச் சந்தை!

பண்டிகைக் காலம் என்றாலே உழைக்கும் வர்க்க மக்களின் உணர்வுகளையும் விருப்பங்களையும் தூண்டிவிட்டு, அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்பை உறிஞ்சுவது கார்ப்பரேட்நுகர்வோர் கலாச்சாரத்தின் வாடிக்கையாகிவிட்டது. இந்தியாவில் பண்டிகைக் காலச் செலவுகளுக்காக 83 சதவீதக் குடும்பங்கள் தங்களின் ஆயுட்காலச் சேமிப்பைக் கரைக்கின்றன என்று ‘லோக்கல்சார்க்கிள்ஸ்’ (LocalCircles) நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் உண்மையைவெளிப்படுத்தியுள்ளன. இதில்16 சதவீதக் குடும்பங்கள் தங்களது பண்டிகைச் செலவுகள் முழுவதையுமே சேமிப்பை நம்பியேசெய்ய வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பொருளாதார மந்தநிலை, விண்ணைத் தொடும் பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை தீவிரமாக நிலவும் இக்காலகட்டத்தில், மக்களின் இந்த கட்டாய நுகர்வுப் போக்கு மிகப்பெரும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றே உணரப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து நடக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உழைப்பாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. இன்னோடேட்டா (Innodata) நிறுவனம் 550 இந்திய ஊழியர்களைத் திடீரெனப் பணிநீக்கம் செய்ததும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்தியாவில் 10 சதவீத ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளதும் வேலைவாய்ப்புச் சந்தையின் கொடூரப் பக்கத்தைக் காட்டுகின்றன. பணிப்பாதுகாப்பற்ற சூழலும், குறைந்த ஊதிய உயர்வும் ஒருபுறம் கழுத்தை நெரிக்கும் வேளையில், மறுபுறம்கார்ப்பரேட் நிறுவனங்கள் ‘வட்டி இல்லா கடன்’ (No-cost EMI), ‘தள்ளுபடி’ மற்றும் ‘வரம்பிற்குட்பட்ட சலுகைகள்’என்ற போர்வையில் நுகர்வோர் வெறியைத் தூண்டி விடுகின்றன. ‘FOMO’ (Fear of Missing Out) எனப்படும் சமூக ஊடகஅடிப்படையிலான உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்தி, எளிய வர்க்க மக்களின் எஞ்சிய சேமிப்பையும்உறிஞ்சி கடன் வலையை நோக்கித் தள்ளும் வர்த்தகச் சூழ்ச்சிகள் அப்பட்டமாக அரங்கேறுகின்றன.

இந்தியக் குடும்பங்களின் சராசரி பண்டிகைக்காலச் செலவு கடந்த ஆண்டு 45,000 ரூபாயாக இருந்த நிலையில், நடப்பாண்டில் அது 20,000ரூபாயாகக் குறைந்துள்ளதே மக்களின் கைகளில் பணம் இல்லை என்பதற்குச் சான்றாகும். அவசர காலத் தேவைகளுக்காகவும், எதிர்காலப்பாதுகாப்பிற்காகவும் வைத்திருக்கும் சேமிப்பைஅழித்துவிட்டுப் பண்டிகைகளைக் கொண்டாடுவது, பாட்டாளி வர்க்கத்தை நிரந்தரக் கடன்சுமையிலும் நடுத்தர வர்க்கத்தைப் பொருளாதாரச் சீரழிவிலும் கொண்டு போய் விடக்கூடும். நிதி நிறுவனங்களும் வங்கிகளும் வட்டி மற்றும்கடன் தவணை மூலமாகக் கூடுதல் லாபம் ஈட்ட உழைப்பாளர்களின் எதிர்காலப் பாதுகாப்பைப் பலிகடாஆக்குகின்றன.

பண்டிகைகளின் பெயரால் மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அநியாய லாபம் ஈட்டும் பெருமுதலாளிகளின் சந்தைச் சுரண்டலை உழைக்கும் மக்கள் துல்லியமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.