கேன்வா நிறுவனத்தில் 1,200 ஊழியர்கள் பணி நீக்கம்
4 Nov 2026, 9:52 pm

கேன்வா நிறுவனத்தில் 1,200 ஊழியர்கள் பணி நீக்கம்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வடிவமைப்புத் தளமான ‘கேன்வா’ நிறுவனம், உலகம் முழுவதும் தனது ஊழியர்களில் சுமார் 22 சதவீதத்தினரை பணிநீக்கம்செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்துவது மற்றும் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்கிறோம் என்றபெயரில் இந்த பணி நீக்க நடவடிக்கைகளை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இதன் பின்னணியில் மொத்தம் 1,271 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட 37 நாடுகளில் 5,700-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், எந்தெந்த நாடுகளில் என்னென்ன பிரிவுகளில் அதிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுஎன்பதை வெளியிடவில்லை. பணிநீக்கம்செய்யப்படும் 1,271 ஊழியர்களின் கோபத்தை சமாளிக்க இந்நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக குறைந்தபட்சம் 6 மாதஊதியம் வழங்கப்படும். ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மேக்புக் மடிக்கணினிகளை அவர்களே வைத்துக்கொள்ளலாம். சொந்தமாக மடிக்கணினி இல்லாதவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தனிப்பட்ட முறையில் நேர்காணல் தயாரிப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் வழங்கப்படும். கேன்வாவின்திறமை குழுவினரும் இதற்கு உதவுவார்கள். அத்துடன் 12 மாதங்களுக்குத் தொடர்ச்சியான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். கேன்வா கேர் (CanvaCare) உதவித் திட்டம், பணியை விட்டுநீக்கப்படும் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் 12 மாதங்களுக்குத் தொடர்ந்து கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.