ரூ.1 கோடி வரை ஏலம் போன தவெக வேட்பாளர்கள் தொண்டர்கள் குமுறல்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>ரூ.1 கோடி வரை ஏலம் போன தவெக வேட்பாளர்கள் தொண்டர்கள் குமுறல்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நேர்கா ணல் நடத்தாமல் தகுதியற்றவர்களுக்கு வேட்பா ளர் பட்டியல் வழங்கப்படுவதாக கட்சியினர் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். வேட்பா ளர்கள் அறிவிப்பு நடந்த மண்டபத்தின் முன்பே கட்சியினர் போராட்டம் நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதி களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள னர். மாவட்டச் செயலாளர் பரணி பாலாஜிக்கு திருக் கோவிலூர் தொகுதியும், ரிஷிவந்தியம் தொகுதி யில் தியாகதுருகம் அசோக்குமார், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியில் அருள் விக்னேஷ், சங்கராபுரம் தொகுதியில் ஜெகதீச பாண்டியன் என நான்கு வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், மூன்று வேட்பாளர்களும் மாவட்டச் செயலாளரான பரணி பாலாஜிக்கு தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்தே சீட் பெற்றதாக கட்சி வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துத் திரியும் தலைவரின் கட்சியிலேயே இவ்வாறு சீட் வாங்கப்படுகிறது என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். போட்டியிடும் வேட்பா ளர்கள் அந்தந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் இல்லை என்பதாலும், மக்களிடம் செல்வாக்கு கிடைக்காது என்று சொந்தக் கட்சியினரே வருத்தத் துடன் முணுமுணுக்கின்றனர்.</p>
