சங்கராபுரம் தொகுதியில் வேட்பாளர் உதயசூரியன் தீவிர பிரச்சாரம்
4 Apr 2026, 4:02 pm
<p><strong>சங்கராபுரம் தொகுதியில் வேட்பாளர் உதயசூரியன் தீவிர பிரச்சாரம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, ஏப். 4- சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் ஏப்ரல் 3 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. திமுக முன்னாள் ஒன்றியச் செ யலாளர் ந.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். வேட்பாளர் தா.உதயசூரியன் பேசுகையில், “மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உங்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவன் நான். கடந்த தேர்தலில் 50,000 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள், இந்தத் தேர்தலில் 80,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ‘2026 சட்டமன்றத் தேர்தல் சமூக நீதிச் சாசனம்’ என்ற நூல் வேட்பாளரிடம் வழங்கப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.இதயத்துல்லா, தேமுதிக மாவட்டச் செயலாளர் எஸ்.கருணாகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். திமுக ஒன்றியக் கழகச் செயலாளர் எஸ்.பி.அரவிந்தன் நன்றி கூறினார்.</p>
