தட்டாஞ்சாவடி தொகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை சிபிஐ வேட்பாளர் சலீம் வாக்குறுதி
25 Sept 2026, 12:42 am

தட்டாஞ்சாவடி தொகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை சிபிஐ வேட்பாளர் சலீம் வாக்குறுதி

புதுச்சேரி, செப்.24-தட்டாஞ்சாவடி தொகுதியில் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வாக்காளர்களிடம் சிபிஐ வேட்பாளர் சலீம் உறுதி அளித்தார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் அ.மு. சலீம் தொகுதிக்குட்பட்ட நவசக்தி நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். அப்போது தொகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சனைகளான போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வாக்காளர்களிடம் உறுதியளித்தார். தொகுதியில் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தன்னை தேர்வு செய்ய கதிர் அறிவால் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

இப்பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநில குழு உறுப்பினர் ஆனந்த், கமிட்டி உறுப்பினர் அரிகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, எழிலன், தட்டாஞ்சாவடி தொகுதி செயலாளர் செல்வம், துணை செயலாளர் மாரிமுத்து, மாநில குழு உறுப்பினர்கள் கீதநாதன், ஹேமலதா, மோதிலால், பாலகிருஷ்ணன், பெருமாள், ஜீவானந்தம், ரவிச்சந்திரன், உட்பட திரளான இடதுசாரி கட்சி தொண்டர்கள் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.