எடப்பாடியில் தேக்க வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு
8 Apr 2026, 5:30 am

எடப்பாடியில் தேக்க வேட்பாளர் மாயம்: ஆடியோ சர்ச்சை; வேட்புமனு நிராகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் செவ்வாயன்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணாமல் போயுள்ளதாக கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் எடப்பாடி அலுவலகம் முன்பு கூச்சலிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்து அருண்குமாரை காணவில்லை என்றும் இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் தாக்கல் செய்த வேட்பு மனு அதிகாரி பூர்ணமாக நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.