பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம்
9 Nov 2025, 2:37 pm
<p><strong>பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனை மருத்துவ வாகன சேவை விரைவில் தொடக்கம்</strong></p>
<p>சென்னை, நவ.9 - பெண்களுக்கான புற்றுநோய் பரிசோதனைக் கான மருத்துவ வாகன சேவை விரைவில் தமிழகத் தில் தொடங்கப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண் சிசுக்கொலையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுப்பது மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்து வதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கு முன்பு ஆண்டு வரு மான வரம்பு ரூ.72 ஆயிரம் என்று இருந்ததை தற்போது ரூ.1 லட்சம் 20 ஆயிரம் என உயர்த்தப் பட்டுள்ளதாகவும், கருத்தடை செய்பவர்களின் வயது வரம்பு 40-லிருந்து 49 ஆக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், பெண் களின் நல்வாழ்வுக்கான வாகனச் சேவை விரை வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச் சர் அறிவித்தார். பெண்களை புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காக கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட எட்டு வகையான புற்றுநோய் பாதிப்புகளுக்கான முழுமையான பரி சோதனைகளை செய்யக் கூடிய வகையில் ஒவ் வொரு மாவட்டத்திற்கும் வாகனங்கள் அனுப்பப்ப டும் என்று அவர் கூறினார். 38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்களை வடி வமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வும், இன்னும் பத்து நாட்களில் முதலமைச்சரால் அவை திறந்து வைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.</p>
