புற்றுநோய் மருந்து விலையில் தொடர் விதிமீறல்கள் மருந்து உரிமை அமைப்பு எச்சரிக்கை
2 Nov 2026, 9:44 pm
<p><strong>புற்றுநோய் மருந்து விலையில் தொடர் விதிமீறல்கள் மருந்து உரிமை அமைப்பு எச்சரிக்கை</strong></p><p>2019ஆம் ஆண்டு தேசியமருந்து விலை நிர்ணய ஆணையம் 42 புற்றுநோய் மருந்துகளின் லாப வரம்பை 30% ஆகக் குறைத்த போதிலும், நிரந்தரக் கண்காணிப்பு இல்லாததால் பெரும்பாலான மருந்துகளின் லாபவரம்பு 700% வரை உயர்ந்துள்ளது எனமருந்து உரிமை அமைப்பு ஆய்வு அறிக்கை மூலம் குற்றம்சாட்டியுள்ளது.இதுதொடர்பான அறிக்கையில்,”484 மருந்துகளின் விலை குறைந்திருந்தாலும், 159 மருந்துகள் பழைய உச்ச விலையிலேயே விற்கப்படுகின்றன. இதில் 4 பிராண்டுகள் 43% முதல் 100% வரையிலும், 39 பிராண்டுகள் 100% முதல் 700-க்கும் அதிகமான லாப வரம்பிலும் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக அதிக விலையுள்ள உயிர்காக்கும் மருந்துகளான பெம்ப்ரோலிசுமாப் (Pembrolizumab) 2,16,500 ரூபாய்க்கும், அலெக்டினிப் (Alectinib) 4,30,696 ரூபாய்க்கும், ஓசிமர்டினிப் (Osimertinib) 3,83,000 ரூபாய்க்கும், பெர்டுஸுமாப் 4,93,266ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் பெயரளவில் மட்டுமேவிலையைக் குறைத்துவிட்டு, காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையைக்குறைக்காமல் தவிர்க்கின்றன. எனவே,அரசு தொடர் சட்டப்பூர்வக் கண்காணிப்பையும் நிரந்தர லாப உச்சவரம்பையும் நடைமுறைப்படுத்தாவிட்டால் நோயாளிகளுக்குப் பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிக்கும்” என மருந்து உரிமை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
