முந்தய பக்கம்

இன்று முதல் புதிய விலையில் புற்றுநோய் மருந்துகள் விற்பனை!

3 hours before
இன்று முதல் புதிய விலையில் புற்றுநோய் மருந்துகள் விற்பனை!

நாடு முழுவதும், புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 1,364 வகை மருந்துகள், குறைக்கப்பட்ட புதிய விலையில் இன்று முதல் விற்பனையாகிறது.

நேற்று, 85 மருந்து நிறுவனங்கள் 121 வகையான மருந்துகளின் கீழ் வரும் 1,364 மருந்து தயாரிப்புகளுக்கான திருத்தப்பட்ட விலைகளை அறிவித்தன. இதில் 679 மருந்துகளின் விலை

50%க்கும் அதிகமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு மருந்தின் விலை 96.45% வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்குப்

பயன்படுத்தப்படும் 1,364 வகை மருந்துகள் இன்று முதல் புதிய விலையில் இன்று முதல் விற்பனையாகிறது.

இந்த விலை குறைப்பு மூலம் ஆண்டுக்கு ரூ.3,540 கோடி நோயாளிகளின் செலவீனம் குறையும் என்று தேசிய மருந்து விலை நிா்ணயம் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புற்றுநோய் மருந்துகளை வாங்குவதற்கு முன்னதாக, பார்மா சாஹி தாம் (Pharma Sahi Daam) செயலி மூலமாகவோ, அல்லது nppa.gov.in இணையதளம் மூலமாகவோ சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தொகையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்தால், 1800-111-255 என்ற எண்ணிலோ அல்லது செயலி மூலமோ புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram