தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும்’

20 Dec 2025, 2:23 pm
‘100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும்’
<p>&lsquo;100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும்&rsquo;</p> <p>மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை நீர்த்துப் போக செய்யும் &ldquo;விபி - ஜி ராம் ஜி&rdquo; என்ற பெயரில் புதிய சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. விரைவில் இது சட்டமாக மாற உள்ளது. இந்நிலையில், மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது வரலாற்று தவறாக அமைந்துவிடும் என நோபல் பரிசுபெற்ற ஜோசப் ஸ்டிக்லி ட்ஸ் உள்பட சர்வதேச பொருளாதார வல்லுநர்கள், சமூக செயற்பாட்டா ளர்கள் மோடி அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அக்கடிதத்தில், &ldquo;வேலை வாய்ப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் உலகிலேயே சிறப்பான கொள் கைகளை கொண்ட 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த திட்டம் மூலம் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பினை பெற்று பொருளா தார அந்தஸ்தை அடிப்படை உரிமை யாக்கி உள்ளனர். &nbsp;குறிப்பாக இந்த திட்டத்தால் பெண்கள், பழங்குடியின மக்கள் அதிகளவில் பயனடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தால் கிராமப்புற வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது. குறைந்த நிதி ஒதுக்கீடு, ஊதியம் வழங்குவதை தாமதப்படுத்துவது திட்டத்தை தீவிர மாக பாதிக்கிறது. பொருளாதார உதவி வழங்காமல் மாநிலங்கள் மேல் சுமை திணிப்பது திட்டத்தின் அடிப்ப டையையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் ஒன்றிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். கட்டாய வேலை, ஒன்றிய அரசின் நிதிஒதுக்கீடு, குறித்த காலத்தில் ஊதியத்தை உறுதி செய்யும் சரத்துகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்&rdquo; என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.