தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்கள் மாண்டது போதும் நீட் தேர்வு ரத்தே வேண்டும்

2 Jun 2026, 8:33 pm
மாணவர்கள் மாண்டது போதும் நீட் தேர்வு ரத்தே வேண்டும்

மாணவர்கள் மாண்டது போதும் நீட் தேர்வு ரத்தே வேண்டும்

“சிரமறுத்தல் வேந்தர்க்கு பொழுதுபோக்கு எமக்கோ உயிரின் வாதை”

என்பார் பாவேந்தர் பாரதிதாசன் தனது புரட்சிக்கவி காவியத்தில். ஆனால் உயிர் காக்கும் மருத்துவப் படிப்பு கடந்த 10 ஆண்டுக ளாக உயிர் பறிக்கும் படிப்பாக ஆக்கப்பட்டு விட்டது ஒன்றிய பாஜக அரசின் பிடிவாதத்தி னால்.

பிரதமர் மோடி பதவியேற்ற பின் நடைமுறைப் படுத்தப்பட்ட நீட் தேர்வு எண்ணற்ற இளம் தளிர்க ளின் உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டி ருக்கிறது. ஏற்கெனவே பிளஸ்2 தேர்வு மதிப்பெண் கள் அடிப்படையில் இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடந் ததை மாற்றியதால் ஏற்பட்ட விபரீத விளைவு தான் மருத்துவக் கனவு கண்ட மாணவர்களின் மரணங்கள் தொடர் கதையானது.

மாநில அரசுகளின் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியதைச் சாதகமாக்கிக் கொண்டு தேசிய தகுதித் தேர்வு எனும் நீட்டைப் புகுத்தியது. அதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டிருந்த மருத்துவக் கல்லூரிக ளின் இடங்களை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது போன்ற நிலை ஏற்பட்டது. அதுதான் அரியலூரின் அனிதா உள்ளிட்ட மாணவச் செல்வங்களை மரணத்தில் தள்ளியது.

ஒன்றிய பாஜக ஆட்சியில் தேர்தல்களும் ஒழுங்காக நடப்பதில்லை; கல்வித் தேர்வுகளும் ஒழுங்காக நடப்பதில்லை. தேர்வுகளை நடத்து வதற்கென தனி முகமையை உருவாக்கியதால் தான் நீட் தேர்வுகளில் குளறுபடிகளும் வினாத் தாள் கசிவுகளும் முறைகேடுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. தற்போதைய நீட் தேர்வு ரத்தால், தில்லி, மர்கோவா, ராஜஸ்தான் (கோட்டா), கர்நாடகா, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் நாளைய மருத்துவர்கள் 5 பேர் மரணித்திருக்கிறார்கள்.

இத்தனைக்கும் காரணமான ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாமல் அட்டையைப் போல் ஒட்டிக் கொண்டிருக்கிறார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிபிஎஸ்இ, பிளஸ் 2 தேர்வு, கியூட் தேர்வு என அனைத்திலும் முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இனி வரும் காலத்தில் கணினி வழித் தேர்வு நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள். தீர்வு இதுவல்ல. நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படி பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்து வப் படிப்புச் சேர்க்கை நடத்த வேண்டும். நீட் தேர்வால் இனி எந்த ஓர் உயிரும் இழப்பதை அனுமதிக்க முடியாது. மாணவர்கள் மாண்டது போதும். நீட்டை ரத்து செய்ய வேண்டும். அதுவே தீர்வு.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.