தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசாணை 187 மற்றும் தமிழ் 99 விசைப்பலகையை ரத்து செய்க! அமைச்சர் வினோத்திடம் வணிகவியல் பள்ளிகள் சங்கம் மனு!

30 May 2026, 9:27 pm
அரசாணை 187 மற்றும் தமிழ் 99 விசைப்பலகையை ரத்து செய்க! அமைச்சர் வினோத்திடம் வணிகவியல் பள்ளிகள் சங்கம் மனு!

அரசாணை 187 மற்றும் தமிழ் 99 விசைப்பலகையை ரத்து செய்க! அமைச்சர் வினோத்திடம் வணிகவியல் பள்ளிகள் சங்கம் மனு!

கும்பகோணம், மே 30- தட்டெழுத்து பொறியை நிராகரிக் கும் அரசாணை எண் 187 மற்றும் தமிழ் 99 விசைப்பலகை திட்டத்தை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் எனத் திருக்குடந்தை வணிகவியல் பள்ளி கள் சங்கம் சார்பில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஆர்.வினோத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில், கணினியைத் திறமை யுடனும் துரிதமாகவும் இயக்குவ தற்குப் பல ஆண்டுகளாக அடிப்படை யாக இருந்து வரும் கையேடு தட்டெ ழுத்து பொறியை (Manual Typewriter) முந்தைய அரசு அரசாணை 187-ன் மூலம் நிராகரித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை எதிர் கால மாணவர்களின் கணினி இயக்கும் திறனைக் குறைப்பதுடன், தமிழகத்தில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட தட்டெ ழுத்துப் பயிலகங்களின் வாழ்வாதா ரத்தைக் கேள்விக்குறியாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள தமிழ் தட்டெ ழுத்து விசைப்பலகை (Key Board) முறையை மாற்றி, ‘தமிழ் 99’ என்ற புதிய விசைப்பலகையை அறிமுகப் படுத்தினால், இதுவரை தட்டெழுத்து கற்றுத் தேர்ந்த மாணவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

அத்துடன் பல ஆயிரம் பழைய தமிழ் தட்டெழுத்துப் பொறிகள் அழியும் அவலமும் உருவாகும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அமைச்சர் வினோத் தங்க ளின் கோரிக்கைகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் துறை சார்ந்த அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, அரசாணை 187-ஐ நீக்கவும், தமிழ் 99 விசைப்பலகையைத் தவிர்த் துப் பழைய விசைப்பலகை முறையி லேயே மாணவர்கள் பழகிட ஆவன செய்ய வேண்டும் என்றும் பயிலக உரிமையாளர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.