தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எப்சி கட்டண உயர்வை ரத்து செய்க! சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

27 Feb 2026, 5:32 pm
எப்சி கட்டண உயர்வை ரத்து செய்க! சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>எப்சி கட்டண உயர்வை ரத்து செய்க! சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சென்னை, பிப். 27 &ndash; வாகன தகுதிச்சான்று (எப்சி) கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி வெள்ளி யன்று (பிப்.27) சாலை போக்கு வரத்து ஆணையரகம் முன்பு ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய மோட்டார் வாகன சட்டம் 2019-ஐ ரத்து செய்ய வேண்டும், பிஎன்ஸ் 106(1), (2) பிரிவுகளை நீக்க வேண்டும், ஆன்லைன் அபராத முறையை ரத்து செய்ய வேண்டும், நேர கட்டுப்பாடு என்ற பெயரில் நகரத்திற்குள் வாகனங்களை முடக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலைவர் பா.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் ஜி.செந்தில்குமார் (தென்சென்னை), எஸ்.கே.முருகேஷ் (மத்தியசென்னை), கால் டாக்ஸி மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.ஆர்.சாமிநாதன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் எம்.உதயகுமார், துணைச் செயலாளர் ஆர்.ராஜ்மோகன், தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ஏ.எல்.கண்ணன், பொருளாளர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு போக்கு வரத்து துறை ஆணையர் கிரண் குராலா விடம், தலைவர்கள் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.