பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரிக்கை!
7 May 2026, 11:42 pm
<p><strong>பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரிக்கை!</strong></p><p>கோவை, மே 7- ஈரான் - இஸ்ரேல் போர் சூழலால் மூலப்பொருட்களின் விலை உயர்ந் துள்ள நிலையில், நலிவடைந்து வரும் ஜவுளித்துறையைப் பாதுகாக்க பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஜவுளித்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். கோவை பந்தையசாலை பகுதியி லுள்ள தென்னிந்திய பஞ்சாலைக் கழ கத்தில் (SIMA), அமெரிக்காவை சேர்ந்த கெர்சி பருத்தி ஆலோசனை கமிட்டி நடத்திய ஆய்வறிக்கையை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு வியா ழனன்று நடைபெற்றது. இதில் இந்திய ஜவுளித்துறை சம்மேளனத்தின் தலை வர் அஸ்வின் சந்திரன் கூறுகையில், இந்தியாவில் தற்போது சுமார் 36 லட் சம் பருத்தி பேல்கள் பற்றாக்குறை நிலவு வதாக ஆய்வறிக்கை கூறுகிறது. தற் போது ஒரு கேண்டி பருத்தியின் விலை 67,000 ரூபாயாக உள்ளது. பருத்தி இறக்குமதி மீது விதிக்கப்படும் 11 சத வீத வரி, தொழில்முனைவோருக்கு கூடு தல் சுமையை ஏற்படுத்துகிறது. இந்தி யாவில் தற்போது பருத்தி உற்பத்தி குறைவாக உள்ளதால், இந்த இறக்கு மதி வரியை நீக்குவதால் உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மாறாக, உலக சந்தையில் மற்ற நாடுகளுடன் இந்திய ஜவுளித் துறை தடையின்றிப் போட்டியிட இது வழிவகுக்கும். மத்திய கிழக்கில் நிலவும் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஜவுளித்துறையின் இதர செலவு களை கடுமையாக உயர்த்தியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டால், துணிகளுக்குப் பயன் படுத்தப்படும் டை மற்றும் கெமிக்கல் களின் விலை 20 சதவீதம் வரை அதிக ரித்துள்ளது. சரக்குப் போக்குவரத்து மற்றும் பேக்கேஜிங் செலவுகளும் கணி சமாக உயர்ந்துள்ளதால், ஜவுளி உற் பத்தி நிறுவனங்கள் பெரும் நெருக்க டியை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணி மற்றும் வேலைவாய்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் ஜவுளித்துறை, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சவால் களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதி களில் உள்ள பின்னலாடை மற்றும் பஞ் சாலைத் தொழில்கள் பருத்தி நூல் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்கனவே தத்தளித்து வருகின்றன. இந்தச் சூழ லில் உலகளாவிய அரசியல் பதற்றங் கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக தொழில் துறையினர் கவலை தெரி விக்கின்றனர். தொழில் வளத்தைப் பெருக்கி, புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்கவும், நலிவடைந்து வரும் ஜவு ளித்துறையை மீட்டெடுக்கவும், பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும். பருத்தி விலையை சீராக வைத்திருக்க, அரசு சார்பில் பருத்தியை சேமித்து நியாய மான விலையில் விற்பனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க தேவை யான மானியங்கள் மற்றும் கடன் வசதி களை எளிமைப்படுத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே லட்சக்கணக்கான தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை காப் பாற்ற முடியும் என்பதே ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
