தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

300 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு நிலமாக மாற்றியதை ரத்து செய்க!

8 Jun 2026, 9:54 pm
300 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு நிலமாக மாற்றியதை ரத்து செய்க!

300 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு நிலமாக மாற்றியதை ரத்து செய்க!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

300 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு நிலமாக மாற்றியதை ரத்து செய்க! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் தூத்துக்குடி, ஜூன் 8- தூத்துக்குடி மாவட்டம் திருவை குண்டம் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களில் உள்ள சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் அரசு நிலமாக மாற்றப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகத்திடம் நடவடிக்கை கோரியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பா. புவிராஜ் அளித்த பேட்டியில், “திருவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த சேரகுளம், வல்லகுளம் கால்வாய் ஆகிய கிராமங்கள் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தைச் சேர்ந்த மீரான்குளம் 1 மற்றும் 2 உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலங்களை 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 30.10.2025 அன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், அந்த நிலங்கள் அரசு நிலமாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு காரணமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வி.என். சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் அதிகள வில் சொத்து சேர்த்த வழக்கில் தொ டர்புடையதாக கூறப்படும் ரிவர்வோ அக்ரோ ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்காக கைப்பற்றப்பட்ட 1,100 ஏக்கர் நிலங்கள் தொடர்பான வழக்குகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் குறிப்பிடப்படுவதாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பறிமுதல் செய்யப்பட்ட நிலங்களு டன் தொடர்புடைய சர்வே எண்களில் இருந்ததால், அதனை ஒட்டியுள்ள விவசாயிகளின் நிலங்களும் அரசு நிலங்களாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதனால், பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்போது அடங்கல், பட்டா உள்ளிட்ட வருவாய் ஆவணங்களை பெறச் செல்லும் போது அந்த நிலங்கள் அரசு நிலமாக பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், நிலங்களுக்கான பட்டா, சிட்டா மற்றும் இசி (Encumbrance Certifi cate) ஆகியவை இன்னும் விவசா யிகளின் பெயரிலேயே உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் முழுமையான ஆய்வு மேற் கொண்டு, உண்மையில் விவசாயி களின் உரிமையில் இருந்த நிலங்களை மீண்டும் அவர்களது பெயரிலேயே மாற்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி விவசாயிகளின் சந்தேகங்க ளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ஆர்.ராகவன், மாவட்ட பொருளாளர் எஸ்.நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவர் ஐ.கணபதி, மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.