வங்கித்துறையில் வாரம் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும்! கனரா வங்கி பணியாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
26 Sept 2026, 9:51 pm

வங்கித்துறையில் வாரம் 5 நாட்கள் வேலை முறையை அமல்படுத்த வேண்டும்! கனரா வங்கி பணியாளர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்

திருச்சிராப்பள்ளி, செப். 26 –வங்கித்துறையில் வாரம் 5 நாட்கள் வேலை முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கனரா வங்கி பணியாளர்கள் சங்கத்தின் (தமிழ்நாடு) 4ஆவது மாநில மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்சி ஹோட்டல் அருண் வளாகத்தில் உள்ள தோழர் எம்.ஆர். ஷெனாய் அரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டிற்குச் சங்கத்தின் தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்ற, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சுரேஷ் தொடக்கவுரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் வெங்கடேஷ், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன (BEFI) தமிழ்நாடு பொதுச்செயலாளர் சுனில்குமார், இணைச் செயலாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

l வங்கித்துறையில் வாரம் 5 வேலை நாட்கள் பணியினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

l புதிய பென்ஷன் திட்டத்தைக் கைவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

l வங்கிப் பணியில் அனைத்து மட்டங்களிலும் தேவைக்கேற்ப புதிய ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும்.

l நியாயமான மற்றும் வெளிப்படையான இடமாற்றுக் கொள்கையை அமல்படுத்துவதோடு, தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

l பெண் ஊழியர்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றுவதுடன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஊதியப் பாகுபாடுகளைக் களைய வேண்டும்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டின் இறுதியில் சங்கத்தின் புதிய மாநிலத் தலைவராக கே. செந்தில்குமார், மாநிலச் செயலாளராக எஸ். பிரேமலதா, மாநிலப் பொருளாளராக ஜி. கணேஷ் உள்ளிட்ட 35 பேர் கொண்ட புதிய மாநிலக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.

அகில இந்திய வேலைநிறுத்தம்

முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் எஸ். பிரேமலதா பேசினார்.

இந்திய வங்கித்துறையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பின் கீழ் திரண்டு போராடி வருவதைக் கண்டு மத்திய அரசு அச்சமடைந்துள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வரச் சொல்லி அரசு நடவடிக்கை எடுப்பதன் மூலம் போராட்டத்தை முடக்கப் பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். வாரத்தில் 5 நாட்கள் வேலை என்பது 2014 முதல் கோரப்பட்டு, 2024இல் இந்திய வங்கிகள் சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கையாகும் என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 500 வங்கி அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பொதுத்துறை வங்கிகளின் லாபம் கடந்த காலங்களை விட பலமடங்கு அதிகரித்துள்ள போதிலும், ஊழியர்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும், ஊழியர் பற்றாக்குறையைப் போக்கக் கோரியும் வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாபெரும் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும், இதனால் வங்கிச் சேவைகள் முற்றிலும் ஸ்தம்பிக்கும் என்றும் அவர் அறிவித்தார். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் தற்காலிக அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு, பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.