கனரா வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>கனரா வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கோவை, நவ.16- தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி, கனரா வங்கி பணியாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். பொதுத்துறை நிறுவன மான கனரா வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு ஊழியர் களை நியமனம் செய்ய வேண் டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த வேண்டும். தனியார் மையம் மற்றும் வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் தொழிலா ளர் விரோத கொள்கைகளை கண்டித்து கனரா வங்கி பணியாளர் சங்கத்தினர் சனி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள கனரா வங்கி மண்டல அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ்.சிவலிங்கம் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலா ளர் மகேஸ்வரன், மாநிலக்குழு உறுப்பினர் கள் ரேணுகா, முருகேசன், முருகன், கதிர் வேல், ராமன் மற்றும் நிர்வாகிகள் ஜெயபா லன், இளைய பாரதி, சிவானந்தம், லட்சும ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல மேலாளரிடம் மனு வழங்கப்பட்டது.</p>
