விளையாடு
19 Jun 2026, 9:24 pm

கத்தாரை 6-0 என்ற கோல் கணக்கில் புரட்டியெடுத்த கனடா

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில் கனடா - கத்தார் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கனடாவின் வான்கூவர் நகரில் வெள்ளியன்று நடைபெற்றது. ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்திலேயே (லாரின்) கனடா அணி கோல் கணக்கை துவங்கியது. 26 மற்றும் முதல் பாதியின் உதிரி நிமிடத்தில் (45+3’) கனடா வீரர் ஜோனதன் டேவிட் அடுத்தடுத்து கோலடித்தார். தொடர்ந்து 2ஆம் பாதியிலும் கனடா அணியின் ஆதிக்கம் நீடித்தது. 64ஆவது நிமிடத்தில் கனடாவின் சலிபா கோலடித்தார். மாற்றுவீரராக களமிறங்கிய கத்தார் வீரர் முகமது மனை சேம் சைடு கோலடிக்க கனடா 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியாக முழுஆட்டநேர கூடுதல் நிமிடத்தையும் விட்டு வைக்காத கனடா, 90+2’ நிமிடத்தில் கோலடித்தது. இந்த கோல் மூலம் கனடாவின் ஜோனதன் டேவிட் ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்தார். இறுதியில் கத்தார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் கனடா புரட்டியெடுத்தது.

ரசிகர்களை அழைத்து வந்த கத்தாருக்கு பலத்த அடி

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை கத்தார் நடத்தியது. போட்டியை நடத்திய நாடு என்ற பெயரில் களமிறங்கிய கத்தார் அனைத்துப் போட்டிகளிலும் தோல்விகண்டது. நடப்பு சீசனின் தனது முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய கத்தார் அணி சுவிட்சர்லாந்தை 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. இதனால் உற்சாகம் அடைந்த கத்தார் அரசு வான்கூவரில் நடைபெற்ற 2ஆவது லீக் ஆட்டத்திற்காக 1,000 ரசிகர்களை கனடாவிற்கு அனுப்பியது. அதாவது விமானம், ஆடம்பர ஹோட்டல், போக்குவரத்து உட்பட சொந்த செலவில் வான்கூவர் நகருக்கு அழைத்து வந்துள்ளது. ஆனால் கனடா அணியிடம் 6-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி படுதோல்வியை சந்தித்தது. ரசிகர்களை அழைத்து வந்த கத்தாருக்கு இது பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

சுவிட்சர்லாந்து கோல் மழை

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘குரூப் பி’ பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - போஸ்னியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டம் தலைசிறந்த அதிரடி ஆட்டங்களில் ஒன்று என கூறலாம். அந்த அளவுக்கு பரபரப்பாக நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் இரு அணி வீரர்களின் தற்காப்பு கலந்த அதிரடி ஆட்டத்தால் கோல் எதுவும் போடவில்லை. 70ஆவது நிமிடம் வரை இதே நிலை தான் நீடித்தது. ஒரு வழியாக 74ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ஜோகன் கோல் கணக்கை துவக்கினார். அடுத்த 16 நிமிட இடைவெளியில் சுவிட்சர்லாந்து (ரூபன் 84’, ஜோகன் 90’) 2 கோல்கள் அடுத்தடுத்து விளாசியது. இதனால் சுவிட்சர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முழு ஆட்டநேர உதிரி நிமிடத்தில் போஸ்னியா வீரர் எர்மின் (90+3’) கோலடித்தார். நாங்கள் முன்னிலையில் இருக்கும் போது நீங்கள் எப்படி கோலடிக்கலாம் என சுவிட்சர்லாந்து வீரர் கிரையாண்ட் கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலம் கோலடித்தார். இதன்மூலம் சுவிட்சர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 80ஆவது நிமிடத்தில் போஸ்னியா வீரர் டாரிக்கிற்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா இல்லாமல் உலகக்கோப்பை கால்பந்து இல்லை

23ஆவது சீசன் கால்பந்து போட்டி மிக சுவாரஸ்ய மாக, தொடக்கத்திலேயே பரபரப்பாக வும் நகர்ந்து வருகிறது. பொதுவாக உலகக்கோப்பை கால்பந்து என்றால் சாதனை, வேத னை, வரலாறு என்று மட்டும் தான் நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆப்பிரிக்கர் குளின் கொண்டாட்ட சேட்டைகளும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய அங்கம் தான். அதாவது ஆப்பிரிக்கர்கள் இல்லாமல் உலகக்கோப்பை இல்லை என்று கூட சொல்லலாம். இதற்கு காரணம் கால்பந்து மைதானத்தில் மனதை கவரும் செயல்களில் ஆப்பிரிக்கர்கள் அதிக மாக ஈடுபடுவது தான். இதனைப் பற்றி காணலாம்: 1. காதை பிளக்கும் பீப்பி தான் ஆப்பிரிக்கர்களின் முதல் அடை யாளம். கால்பந்து மைதானத்தில் பீப்பி சத்தம் கேட்டால் அங்கு ஏதோ ஒரு ஆப்பிரிக்கா அணி விளையாடுகிறது என்று அர்த்தம். 2. கோல் அடித்தால் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டு அணிகளும் ஒரு வித நடனத்தை வெளிப்படுத்து வார்கள். நன்றாக பயிற்சி எடுத்து வந்த சினிமாகாரர்கள் கூட அவர்களிடம் தொற்று போவா ர்கள். அவ்வளவு அழகாக நடனமாடு வார்கள். 3. தேவையில்லாமல் எந்த வம்பு சண்டைக்கும் போக மாட்டார்கள். வெற்றி என்றால் கொண்டாட்டம், தோல்வி என்றால் கண்ணீர் அவ்வ ளவு தான். 4. இந்த நாட்டுக்கு தான் ஆதரவு தர வேண்டும் என்று உலகக் கோப்பையை காண வரமாட்டார் கள். தங்கள் நாடு லீக் சுற்றில் வெளி யேறி விட்டாலும், ஆப்பிரிக்க கண்ட த்தில் அங்கம் வகிக்கும் வேறு ஒரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், அந்த அணிக்காக டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் புகுந்துவிடுவார்கள். 5. எதிரணி ஆச்சரியமிக்க கோல டித்தாலும் தமிழ்நாடு ரசிகர்கள் போல கண்டிப்பாக பாராட்டுவார்கள். இதுபோன்ற தனித்துவமான செயல்களால் தான் ஆப்பிரிக்கா இல் லாமல் உலகக்கோப்பை கால்பந்து இல்லை என்று கூறப்படுகிறது.

ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்தும் மெக்சிகோவிடம் தோல்விகண்ட தென் கொரியா

குரூப் ஏ பிரிவிற்கான லீக் ஆட்டம் மெக்சிகோவின் ஸபோனில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ - தென் கொரியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பந்தை 57% நேரம் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தது தென் கொரியா. ஆனாலும் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் மூலம் (லூயிஸ் ரோமோ) மெக்சிகோ அணி (1-0) அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆதிக்கம் செலுத்தினாலும் கோல் மூலம் தென் கொரியாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது மெக்சிகோ.

உலகக் கோப்பை கால்பந்து இன்றைய ஆட்டங்கள்

பிரேசில் - ஹைத்தி (குரூப் சி)

நேரம் : காலை 6.00 மணி இடம் : பிலடெல்பியா, அமெரிக்கா

துருக்கி - பராகுவே (குரூப் டி)

நேரம் : காலை 8:30 மணி இடம் : சான்பிரான்சிஸ்கோ, அமெரிக்கா

நெதர்லாந்து - சுவீடன் (குரூப் எப்)

நேரம் : இரவு 10:30 மணி இடம் : ஹூஸ்டன், அமெரிக்கா

ஜெர்மனி - ஐவரிகோஸ்ட் (குரூப் இ)

நேரம் : அதிகாலை 1:30 மணி இடம் : டொராண்டோ, கனடா சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)

சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)