தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கனடாவிலிருந்து அதிகளவில் இந்தியர்கள் நாடு கடத்தல்6 மாதங்களில் 3,323 பேர் வெளியேற்றம்

9 Aug 2026, 10:33 pm
கனடாவிலிருந்து அதிகளவில் இந்தியர்கள் நாடு கடத்தல்6 மாதங்களில் 3,323 பேர் வெளியேற்றம்

கனடாவிலிருந்து அதிகளவில் இந்தியர்கள் நாடு கடத்தல்6 மாதங்களில் 3,323 பேர் வெளியேற்றம்

வட அமெரிக்க நாடான கனடாவிலிருந்து இந்தியர்கள் அதிகளவில் நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 6 மாதங்களில் 3,323 பேர் வெளியேற்றபட்டுள்ளனர் என்றஅதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக கனடா நாட்டின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 3,323 இந்தியர்களைக் கனடா அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. இது 2025ஆம் ஆண்டு முழுவதும் நாடு கடத்தப்பட்ட 3,779 இந்தியர்களின் எண் ணிக்கையில் கிட்டத்தட்ட 88 சதவீதமாகும். மேலும் 7,669க்கும் அதிகமான இந்தியர்கள் கனடாவிலிருந்து நாடு கடத்தப் படும் பட்டியலில் உள்ளனர்.

குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கான எண்ணிக்கை, 2021 முதல் 2024 வரையிலான ஒவ்வொருஆண்டின் வருடாந்திர மொத்த எண் ணிக்கையை விட அதிகமாகும். இந்த ஆண்டு கனடாவிலிருந்து அதிக அளவில் நாடு கடத்தப்பட்டவர்கள் என்ற வரிசையில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர். இதே காலகட்டத்தில் கனடா 1,573 மெக்சிகன் நாட்டினரை வெளியேற்றியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மெக்சிகோ முதலிடத்திலும், இந்தியா தொடர்ந்து இரண்டாவது இடத்திலும்இருந்து வந்தன. தற்போது மெக்சிகோவை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.

மோடி பிரதமர் ஆன பின்பு மோசம்

மோடி 2ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு கனடாவிலிருந்து நாடு கடத் தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக அதிகரித்துவருகிறது. 2019ஆம் ஆண்டு மோடி 2ஆவது முறையாக பிரதமர் ஆன நிலையில், 2021இல் 603, 2022இல் 786, 2023இல் 1,132, 2024இல் 2,004 மற்றும் 2025இல் 3,779 எனத் தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, மோடி 3ஆவது முறையாக பிரதமர் ஆன பின்பு (2024 முதல்) கனடாவிலிருந்து வெளியேற்றப்படும் இந்தியர்களின்எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவர் எண்ணிக்கையும் சரிவு

கனடாவின் தலைமைக் கணக்காளர் தகவல்படி,2023இல் 51.6% ஆக இருந்த சர்வதேச மாணவர் சேர்க்கையில் இந்தியர்களின் பங்கு, செப்டம்பர் 2025இல் 8.1% ஆகக் கடுமையாகக்குறைந்துள்ளது. ஒன்றிய அரசாங்கத்தரவுகளின்படி, கனடாவைத் தேர்ந்தெடுக்கும் இந்திய மாணவர்களின் எண் ணிக்கை 41% வீழ்ச்சியடைந்து, 2023இல் 2,33,532 இலிருந்து 2024இல் 1,37,608 ஆகக் குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.