விளையாடு
29 Jun 2026, 9:37 pm

விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

முதல் முறையாக ‘நாக் அவுட் - 16’ சுற்றுக்கு முன்னேறிய கனடா

23ஆவது சீசன் உலகக்கோப் பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடு களில் கூட்டாக நடைபெற்று வரு கிறது. இந்த தொடரில் தற்போது நாக் அவுட்-32 சுற்று ஆட்டங்கள் நடை பெற்று வருகின்றன. இந்திய நேரப்படி திங்களன்று நடை பெற்ற முதல் நாக் அவுட் சுற்று ஆட்டத் தில் தென் ஆப்பிரிக்கா - கனடா அணி கள் மோதின. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் தொடக்கம் முதலே கனடா அணி கோலடிக்க கடுமையாக தாக்குதல் நடத்தியது. எனினும் தென் ஆப்பிரிக்கா தடுப்பாட்டத்தில் அசத்த லாக செயல்பட்டதால், கனடா கோலடிக்க கடுமையாக திணறியது. ஆட்டத்தின் 90 நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இதனால் இந்த ஆட்டம் கூடுதல் நிமிட (30 நிமிடம்) போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் ஆட்ட நேர முடிவின் உதிரி நிமிடத்தில் (90+2’) கனடா வீரர் ஸ்டீபன் உஸ்டாக்கியோ பெனால்டி பாக்ஸிற்கு வெளியிலிருந்து மிக நேர்த்தியாக அடித்த லோ-ஷாட், கோலாக மாறியது. இது அதிரடி ஷாட் கோலாகும். இந்த ஒரே ஒரு வரலாற்று சிறப்புமிக்க கோல் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் கனடா அபார வெற்றி பெற்று, நாக் அவுட்-16 சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான கனடா உலகக்கோப்பை நாக் அவுட்-32சுற்றிற்கு முன்னேறியது மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற அணி என்ற இரண்டு வரலாற்றுச் சாதனையை (தனக்கானது) 23ஆவது சீசன் உலகக்கோப்பை தொடரில் படைத்துள்ளது. மேலும் இந்த தொட ரின் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற்ற முதல் அணியும் கனடா தான். தென் ஆப்பிரிக்காவின் தீரமான போராட்டம் முடிவு குரூப் சுற்றில் பலமான ஆசிய அணி யான தென் கொரியாவை வீழ்த்தி, செக் குடியரசுடன் டிரா செய்து தன்னுடைய கால்பந்து வரலாற்றுச் சாதனையுடன் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்காவின் கனவுப்பயணம் கனடா அணியுடனான தோல்வியோடு முடிவுக்கு வந்தது. அந்த அணியின் கோல்கீப்பர் ரோன் வென் வில்லியம்ஸ் நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் 77 வெற்றிகரமான பாஸ்களைக் கொடுத்து 1966 உலகக்கோப்பைக்குப் பிறகு புதிய சாதனை படைத்தாலும், தென் ஆப்பிரிக்காவின் முன்கள ஆட்டம் சோபிக்காததால் கோல் அடிக்க முடியாமல் போனது. இத்தகைய சூழலில், வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள கனடா அணி ஜூலை 4 அன்று அமெரிக் காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற வுள்ள ‘சுற்று-16’ ஆட்டத்தில் (நாக் அவுட்) நெதர்லாந்து அல்லது மொரா க்கோ அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் - செவ்வாய், புதன்

ஐவரி கோஸ்ட் - நார்வே நேரம் : இரவு 10.30 மணி இடம்: டல்லாஸ், அமெரிக்கா

பிரான்ஸ் - சுவீடன் நேரம் : அதிகாலை 2.30 மணி இடம் : நியூஜெர்சி, அமெரிக்கா

மெக்சிகோ - ஈகுவடார் நேரம் : காலை 6.30 மணி இடம் : மெக்சிகோ சிட்டி

சேனல் : ஜீ 5 (ஓடிடி), யூனைட்8 (தொலைக்காட்சி)/ ஹைலைட்ஸ் வீடியோ பார்க்க வேண்டுமென்றால் பிபா அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

உருகுவே அணிக்குள்ளேயே வெடித்த ‘உள்நாட்டு மோதல்’

முதல் உலகக்கோப்பை கால்பந்து சாம்பியனான உருகுவே அணி 1930 மற்றும் 1950 என இரண்டு முறை மகுடம் வென்ற அணியாகும். ஆனால் மோசமான பாரமில்லாத ஆட்டத்தால் தற்போது நடைபெற்று வரும் 23ஆவது சீச னிலும், கடந்த சீசனை போலவே குரூப் சுற்றோடு உருகுவே வெளியேறியது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் சுவரேஸ் நீக்க சர்ச்சைக்கு இடையே களமிறங்கிய உருகுவே அணி, கடந்த சீசனை விட நடப்பு சீசனில் ஓரளவே நன்றாக விளையாடியது. ஆனாலும் தலைமைப் பயிற்சியாளருக்கும் வீரர்களுக்கும் இடையே மோதலால் தான் முன்னாள் சாம்பியனான உரு குவே அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியாமல் குரூப் சுற் றோடு வெளியேறியது தற்போது அம்பலமாகியுள்ளது. குறிப்பாக இந்த மோதல் ஸ்பெயின் அணிக்கெதி ரான கடைசி லீக் ஆட்டத்தின் போது தான் வெளிச்சத்திற்கு வந்தது. ஹை-பிரெஸ்ஸிங் உருகுவே தலைமைப் பயிற்சி யாளர் மார்செலோ பியெல்சாவின் அதீத பயிற்சி முறைகளால் வீரர் களுக்கு அடுத்தடுத்துக் காயங்கள் ஏற்படுவதாக வீரர்கள் தொடர்ச்சி யாக குற்றம்சாட்டினர். குறிப்பாக வாழ்வா - சாவா ஆட்டமான ஸ்பெயின் அணியை (கடைசி லீக் - தோற்றால் அவுட்) வீழ்த்த தற்காப்புப் பாணி யான ‘லோ பிளாக்’ (Low Block) வியூகத்தைப் பயன்படுத்த உருகுவே வீரர்கள் கோரினர். ஆனால், பியெல்சா தனது தீவிர ‘ஹை-பிரெஸ்ஸிங்’ அதிரடித் தாக்குதல் பாணியை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று கூறி, தனது முடி வை மாற்றிக்கொள்ள மறுத்துவிட் டார். பயிற்சியாளர் தனது முடிவுகளில் சமரசம் செய்ய மறுத்ததால், அணி யின் முதன்மை வீரர்களான பெடெ ரிகோ வல்வெர்டே, மானுவல், ரொட்ரிகோ உள்ளிட்டோர் போட்டிக்கு முன்பு அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டினர். பயிற்சியாளர் இல்லாமல் சுமார் 48 நிமிடங்கள் இந்த ஆலோசனைக் கூட்டம் நீடித்தது. மேலும் போட்டிக்கு நடுவில் நடைபெற்ற பயிற்சியாளரின் ஆலோசனைக் கூட்டத்தையும் வீரர்கள் புறக்கணித்தனர். இந்த மோசமான நிலைக்கு இடையே தனது கடைசி லீக் ஆட்டத் தில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து, ஒரு வெற்றி யைக் கூட (2 டிரா - கேபோ வெர்டே, சவூதி அரேபியா) ருசிக்காமல் போட்டியில் உலகக்கோப்பையில் இருந்து உருகுவே வெளியேறியது. உலகக்கோப்பையில் வீரர் களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் கடந்த சீசனில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோ பயிற்சியாளருக்கும் இடையே அரங்கேறிய மோதல் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான மோதல் மிகவும் பெரிதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.