தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும்! புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

11 Apr 2026, 5:30 am
2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும்! புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

2029 பொதுத் தேர்தலிலேயே மகளிர்க்கு 33% இடங்களை வழங்க முடியும்! புதிய முன்மொழிவுகள் பெயரில் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா?

புதுதில்லி, ஏப். 10 - மகளிர்க்கான இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும், நாடாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக விரிவான அளவில் கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கட்டாயமாக்குவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. 2023-இல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டமுன்வடிவு முன்மொழியப்பட்ட போது, அதனை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் இணைப்பதை சிபிஎம் எதிர்த்தது.

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு இணைப்பது பெரும் தாமதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக 2024 மற்றும் 2029 தேர்தல்களில் கூட பெண்களுக்கு உரிய இடங்கள் மறுக்கப்படும். தொகுதி மறுவரையறையிலிருந்து இடஒதுக்கீட்டைப் பிரிப்பதற்கான ஒரு திருத்தம் மட்டுமே இதற்குத் தேவைப்படும்.

2029 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த முடியும் என்பதை சிபிஎம் மீண்டும் வலியுறுத்துகிறது. ஆனால் அவ்வாறு செய்வதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாடு மோடி அரசிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.