தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 Mar 2026, 4:13 pm

‘சேலஞ்ச் ஓட்டு’ போடலாம்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வர்கள், ஆதார் அல்லது வாக்காளர் அட்டையை காட்டி ‘சேலஞ்ச் ஓட்டு’ பதிவு செய்யலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. வாக்காளர் பட்டிய லில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ப தும், தேர்தல் நடத்துதல் விதி 49A பிரிவு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பானதே தவிர சேலஞ்ச் ஓட்டு குறித்த தல்ல என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உங்கள் வாக்கை வேறொருவர் பதிந்திருந்தால் 49P பிரிவின்கீழ் டெண்டர் வாக்காக பதியலாம். 14 சதவீதத்திற்கும் அதிகமான டெண்டர் வாக்குகள் பதிவானால் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்பது பொய்யான தகவல் என்று சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

அமமுக 11 வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் 11 வேட்பா ளர்களின் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதன்படி பெரியகுளம் தொகுதியில் கதிர்காமு (முன் னாள் எம்எல்ஏ), மன்னார்குடியில் காமராஜ் (முன்னாள் எம்எல்ஏ), திருவையாற்றில் கார்த்திகேயன், காரைக்குடியில் தேர்போகி பாண்டி, திருப்பத்தூரில் ஞானசேகரன், நாங்கு நேரியில் இசக்கிமுத்து, ஒட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜன் (முன்னாள் எம்எல்ஏ), திருச்சி மேற்கில் தொட்டியம் ராஜ சேகரன் (முன்னாள் எம்எல்ஏ), சைதாப்பேட்டையில் செந்தமி ழன் (முன்னாள் அமைச்சர்), பூந்தமல்லியில் ஏழுமலை (முன்னாள் எம்எல்ஏ), மடத்துக்குளத்தில் சி.வி.சண்முக வேல் (முன்னாள் அமைச்சர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 120 வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையையும் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி போட்டி புதிய நீதிக் கட்சி அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில், மதுரை மத்திய தொகுதியில் திரைப்பட இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்புவின் கணவர் ஆவார். அதிமுக வழங்கிய இரட்டை இலை சின்னத்தில் இவர் போட்டி யிடுவார். நேரடி அரசியலில் ஈடுபடாத சுந்தர் சி புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக வெளியான அறிவிப்பு அரசியல் வட்டாரங் களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டின்போது கலந்து கொள்ளாத புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், பின்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அப்போது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றால் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தாமரை சின்னத்தில் போட்டியிட ஒரு தொகுதியை கொடுத்தார்.

தாமரைச் சின்னத்தில் ஜான் பாண்டியன்!

அதேசமயம், கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு இராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளரும் தலை வர் ஜான் பாண்டியனின் மனைவியுமான வழக்கறிஞர் ஜா.பிரிசில்லா பாண்டியன் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.