புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது
6 Apr 2026, 5:37 pm
<p><strong>புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது</strong></p>
<p>புதுச்சேரி ஏப். 6- புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க் கிழமை) மாலையுடன் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறு கிறது. 30 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை தேர்தலில் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த மார்ச் 16ஆம் தேதியிலிருந்து துவங்கிய தேர்தல் பணிகளில் திமுக, காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ,என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆரம்பத்தில் மந்தமாக இருந்த தேர்தல் பிரச்சாரம் பின்னர் திமுக,காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசி யல் கட்சித் தலைவர்களின் வருகையால் பிரச்சாரம் புதுச்சேரியில் சூடு பிடித்தது. மொத்தம் 9 லட்சத்து 50 ஆயிரம் 311 வாக்காளர்கள் வாக்கு செலுத்த தகுதி யானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தகுதி உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க 1099 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பணியில் வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப் பதிவு நிலை அலுவலர்கள் என அரசு ஊழியர்கள் மொத்தம் 4,934 பேர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பக்காக துணை ராணுவ படை யினர் வரவழைக்கப்பட்டதுடன், புதுச்சேரி போலீசார் என 5000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புபணியில் ஈடு பட்டுள்ளனர். தேர்தல் நடைபெறுவதால் ஒரு வார காலத்திற்கு அரசு மற்றும் தனியார் பள்ளியில் புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. வாக்குப்பதிவு அன்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சாரம் ஓய்வு 23 நாட்கள் நடைபெற்று வந்த பிரச்சாரம் (ஏப்- 7) செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. நாளை மறுதினம் (ஏப் -9) புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் வாக்குப்பதிவு முடிவுகள் மே 4 அறிவிக்கப்படுகிறது.</p>
