தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது

7 Dec 2025, 3:52 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்  முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது
<p><strong>கேரள உள்ளாட்சித் தேர்தல் &nbsp;முதற்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது</strong></p> <p>திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் டிச. 9 &nbsp;மற்றும் 11 ஆகிய தேதி களில் இரண்டு கட்ட மாக உள்ளாட்சித் தேர்தல் நடை பெறும் என அம்மாநில தேர்தல் &nbsp;ஆணையம் சமீபத்தில் அறிவித் தது. அதன்படி டிச 9., அன்று நடை பெற உள்ள முதல் கட்ட தேர்த லில் திருவனந்தபுரம், கொல்லம், &nbsp;பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட் &nbsp;டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள உள்ளா ட்சி அமைப்புகளுக்கு செவ்வா யன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் ஞாயிறன்று ஓய்ந்தது. 7 மாவட்டங்க ளில் 1.32 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்கான முன்னேற்பாடு கள் நிறைவடைந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் ஏ.ஷாஜகான் அறிவித்தார். சட்டம் ஒழுங்கு பிரச்ச னைகளைத் தவிர்க்க முன்னெச்ச ரிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக, திருச்சூர் &nbsp;முதல் காசர்கோடு வரையிலான 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும். 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப் &nbsp;பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள் &nbsp;ளன. உள்ளூர் வளர்ச்சியின் முது கெலும்பாக இருக்கும் உள்ளாட்சி &nbsp;அமைப்புகளின் செயல்பாடு மற் &nbsp;றும் கடந்த ஒன்பதரை ஆண்டு களில் மாநிலம் முழுவதும் ஏற் பட்டுள்ள வளர்ச்சி குறித்து முக்கிய விவாதம் தேர்தல் களத்தில் நடை பெற்றது. ஆட்சியில் ஏற்பட்டுள்ள &nbsp;மாற்றங்களை முன்வைத்து வாக்காளர்களை எல்டிஎப் (இடது &nbsp;ஜனநாயக முன்னணி) நம்பிக்கை யுடன் சந்தி்த்தது. யுடிஎப்பும் (காங்கி ரஸ் கூட்டணி), பாஜகவும் தற்காப்பு &nbsp;நிலையில் உள்ளன. ராகுல் மாங் &nbsp;கூட்டத்திலின் பாலியல் வன் &nbsp;கொடுமை வழக்குகள் வெளிச்சத் திற்கு வந்தபோது ஜமாத்-இ-இஸ் &nbsp;லாமி உடனான யுடிஎப் கூட்டணி மக்களிடமிருந்து பெரும் எதி ர்ப்பைச் சந்தித்து வருகிறது. &nbsp;பெங்க ளூர் நில மோசடியில் பாஜக தலை வர் ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பெரிங்கமலா கூட்டுறவு வங்கி ஊழலில் பொதுச் செயலாளர் எஸ். சுரேஷ் ஆகியோர் சிக்கியுள்ளதால், பாஜகவால் வாக்காளர்களை எதிர் &nbsp;கொள்ள முடியவில்லை.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.