தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசியல் நையாண்டிப் பாடல்கள் மூலம் சிபிஎம் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம்

2 Apr 2026, 3:50 pm
அரசியல் நையாண்டிப் பாடல்கள் மூலம் சிபிஎம் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம்
<p><strong>அரசியல் நையாண்டிப் பாடல்கள் மூலம் சிபிஎம் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம்</strong></p> <p>புதுச்சேரி, ஏப். 2- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அரசியல் நையாண்டிப் பாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் &lsquo;அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்&rsquo; சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.ராஜாங்கத்தை ஆதரித்து, உழவர் சந்தை எதிரே இந்தப் பிரச்சாரம் தொடங்கியது. இதில் புதுச்சேரி சப்தர் ஆஸ்மி கலைக்குழுவினர் பங்கேற்றுத் தங்களின் தனித்துவமான பாணியில் வாக்கு சேகரித்தனர். பாடகர்கள் செல்வம், சேகர், அமுதா மற்றும் தவில் கலைஞர்கள் விநாயகம், அமர்நாத் ஆகியோர் வீதி வீதியாகச் சென்று அரசியல் நையாண்டிப் பாடல்களைப் பாடினர். தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைச் சுட்டிக்காட்டியும், பொதுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளை மையப்படுத்தியும் கலைநயத்துடன் இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதேபோல், திருபுவனை தொகுதி வேட்பாளர் தட்சிணாமூர்த்தியை ஆதரித்துத் திறந்த வாகனத்தில் மேளதாளங்கள் முழங்கக் கலைக்குழுவினர் பிரச்சாரம் செய்தனர். புதுமையான முறையில் அமைந்த இந்தப் பிரச்சாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.