தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

3 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது: செங்கொடிகளால் சிவந்த கேரளம்!

8 Apr 2026, 5:30 am
3 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது: செங்கொடிகளால் சிவந்த கேரளம்!

3 மாநிலங்களில் பிரச்சாரம் ஓய்ந்தது: செங்கொடிகளால் சிவந்த கேரளம்!

திருவனந்தபுரம், ஏப். 7 - 140 தொகுதிகளைக் கொண்ட கேரளம், 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலங்களிலும், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 9 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த 3 மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியிலுள்ள கட்சிகளின் அணிகள் பறக்கும் பிரச்சாரம், கேரள மாநிலத்தின் மூலை முடுக்குகெங்கும் எதிரொலித்தது. செங்கொடிகளால் கேரளம் சிவந்தது. ரோடு ஷோக்கள், பேரணிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் கேரளம் அதிர மாலை 5 மணிக்கு அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது.

அதேபோல எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ், சிபிஎம்) கூட்டணியின் வலுவான இறுதிக்கட்ட பிரச்சாரத்துடன் அசாமிலும் மாலை 5 மணிக்கு பிரச்சாரம் ஓய்ந்தது. புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், எளிமையான மக்கள் சந்திப்பு, வீடுகள் தோறும் வாக்குசேகரிப்பு நடைபெற்றது. பிரச்சாரம் நிறைவடைந்த பின்பு அசாம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் தொகுதிச் சம்பந்தமில்லாத நபர்கள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.