நல்லாற்றை பாதுகாக்க கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரச்சாரப் பயணம்
12 Dec 2025, 3:12 pm
<p>அவிநாசி, டிச.12- நல்லாற்றை மீட்டெடுக்க, இரு மாவட்டங் களில் பிரச்சாரம் மேற்கொள்ள திருமுருகன் பூண்டியில் நடைபெற்ற நல்லாறு பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் திட்டமிட்டுள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் நல்லாறு கடந்து செல்கிறது. இந்த நல்லாறு கரையில், திருமுருகன்பூண்டி நகராட்சி நிர் வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார் கள் என்று, நல்லாறு பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல் லாற்றை மீட்டெடுக்கும் வகையில் திருமுரு கன்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி, நல்லாற்றில் ஆக்கிரமிப்பை அகற்றவும், நல் லாற்றை தூர் வாரவும் கோரிக்கைகள் முன் வைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ள னர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு இயக்கங் களை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, திருமுருகன்பூண்டி தனியார் திரு மண மண்டபத்தில் நல்லாறு மறுபிறவி எடுக் குமா என்ற தலைப்பில் கோவை சதாசிவம், ஆறுகள் குறித்தும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். இந்நிலையில் நல்லாறு பாது காப்பு இயக்கத்தினர், அடுத்த கட்டமாக கோவை மாவட்டம், அன்னூர் எல்லையில் இருந்து, திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டி நகராட்சி வரை, பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைத்து பத்துக்கும் மேற்பட்ட இடங் களில் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.</p>
