முந்தய பக்கம்

முதலியார்பேட்டைக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பிரச்சாரம்

18 Nov 2025, 5:50 pm
முதலியார்பேட்டைக்கு அடிப்படை  வசதிகள் செய்து தரக்கோரி பிரச்சாரம்
<p><strong>முதலியார்பேட்டைக்கு அடிப்படை &nbsp;வசதிகள் செய்து தரக்கோரி பிரச்சாரம்</strong></p> <p>புதுச்சேரி, நவ. 18- புதுச்சேரி நகரத்திற்கு அடுத்தபடியாக மக்கள் நெருக்கமாக வாழும் முதலியார்பேட்டையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வா யன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. முதலியார்பேட்டை வானொலி திடலிலிருந்து துவங்கிய இந்தப் பிரச்சாரத்திற்கு, கிளைச் செயலாளர்கள் அமானு ல்லா, சூரியன், விஜயகுமார் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். மாநில செயற்குழு உறுப்பி னர் கலியமூர்த்தி பிரச் சாரத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். &nbsp;முதலியார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ மனையின் தரத்தை உயர்த்தி மருந்துகள் இருப்பை உறுதி செய்ய வேண்டும், கடலூர் சாலை யில் ரயில்வே மேம்பாலப் பணிகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும். &nbsp;கடலூர் சாலையில் விபத்து களைத் தடுக்க மரப் பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சாலைவரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், &nbsp;குடியிருப்புப் பகுதிகளில் எரியாத மின் விளக்குகளைச் சரி செய்யவேண்டும் என்று பிரச்சாரத்தில் வலி யுறுத்தப்பட்டது. முதலியார்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உப்பளம் சாலை, அனிதா நகர், ஏஎஃப்டி மில் வீதி, மரப்பாலம், முருங்கப் பாக்கம், கொம்பாக்கம் சாலை ஆகிய இடங்களில் கொட்டும் மழையிலும் பிரச்சாரம் நடைபெற்றது. நகர கமிட்டிச் செயலாளர் ஜோதிபாசு பிரச்சாரத்தை நிறைவு செய்து பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram