தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தியை ஆதரித்து கே.பாலபாரதி தீவிர வாக்கு சேகரிப்பு

29 Sept 2026, 9:31 pm
சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தியை ஆதரித்து  கே.பாலபாரதி தீவிர வாக்கு சேகரிப்பு

சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தியை ஆதரித்து கே.பாலபாரதி தீவிர வாக்கு சேகரிப்பு

மதுராந்தகம், செப். 29-செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி, ஒனம்பாக்கம், சின்னவெண்மணி, பவுத்தங்கரனை, விளங்க னுர், சாமந்திபுரம், சித்தா மூர், நெட்ரம்பாக்கம், அண்ணாநகர், கொள்ளம் பாக்கம், காட்டுதேவாதூர், கீழ்கரணை, நல்லாமூர், கொளத்தூர், சரவம்பாக்கம், பெருவேலி, பையம்பாடி, வில்வராயநல்லூர் மற்றும் குருகுலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஒனம்பாக்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத் தொடக்கக் கூட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:"கடந்த காலத்தில் இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாகவும், எம்பியாகவும் இருந்த மரகதம் குமர வேல், பல பதவிகளை வழங்கிய அதிமுகவை விட்டு

விட்டு தவெக கட்சிக்குத் தாவியுள்ளார். சில கோடி ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கும் குதிரை பேர அரசியலை தவெக செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் ரூ.3,000, ரூ.4,000, ரூ.5,000 என பணம் கொடுத்து வாக்கு களை விலைக்கு வாங்கும்வேலையில் இறங்கி யுள்ளனர்.அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், முதியோர் மற்றும் விதவை பென்சன் கூட கடந்த 4மாதங்களாக வழங்கப்படவில்லை. வறுமையிலும் ஏழ்மை யிலும் உள்ள சிபிஎம், மக்களுக்காகவும் உழைப்பாளர்களுக்கா கவும் மட்டுமே தொடர்ந்து குரல் கொடுத்து வரு கிறது. சட்டமன்றத்தில் மக்களின் உரிமைகளை வலியுறுத்தவும், இடதுசாரி குரலை வலுப்படுத்தவும் மதுராந்தகம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்திக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ், கே.சாமு வேல்ராஜ், எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.நம்புராஜன், கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், பகுதி செயலாளர்கள் எஸ்.ராஜா, பி.கே.ரபிக், எம்.வெங்கடேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ரவி, க.ஜெயந்தி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இரா.சதிஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.