முந்தய பக்கம்

நல்ல குடிநீர் கேட்டு புதுச்சேரியில் பிரச்சாரம்

19 Nov 2025, 3:33 pm
நல்ல குடிநீர் கேட்டு புதுச்சேரியில் பிரச்சாரம்
<p><strong>நல்ல குடிநீர் கேட்டு புதுச்சேரியில் பிரச்சாரம்</strong></p> <p>புதுச்சேரி, நவ.19- புதுச்சேரி கடலூர் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று தெருமுனைப் பிரச்சாரத்தில் சிபிஎம் தலைவர்கள் வலியுறுத்தல். புதுச்சேரி தேங்காய்த்திட்டு மரப்பாலம் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும், சுற்றுவட்டாரத்தில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், எரியாத மின்விளக்குகளை சீர் செய்ய வேண்டும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட &nbsp;கோரிக்கைகளை வலியுறுத்தி தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முருகன் பிரச்சாரத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனுவாசன், கலிய மூர்த்தி மாநிலக் குழு உறுப்பினர்கள் சங்கர், மதிவாணன், கமிட்டி உறுப்பினர் மணவாளன், கிளைச் செயலாளர்கள் ஸ்டாலின், அமானுல்லா உட்பட திரளா னோர் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram