தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து பிரச்சாரம்

21 Jan 2026, 3:58 pm
ஒன்றிய அரசை கண்டித்து பிரச்சாரம்
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து பிரச்சாரம்</strong></p> <p>கோவை, ஜன.21- நூறு நாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய &nbsp;மோடி அரசை கண்டித்து, அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நூறு நாள் வேலைத்திட்டத்தை மோடி அரசு படிப்படி யாக சிதைத்தோடு அல்லாமல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு ஒரு புதிய திட்டமாக -விபிஜி ராம்ஜி என பெயர் மாற்றியுள்ளது. மேலும், தொடர்ந்து தொழிலாளர் விரோத சட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது. ஒன்றிய மோடி அரசை கண்டித்து, மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய சங்கங்கள் இணைந்து பிப்.12இல் மாபெரும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சிஐடியு, விச, விதொச இயக்கங்கள் பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து வருகின்றனர். &nbsp;இதன் ஒரு பகுதியாக, சிஐடியு சூலூர் தாலுகாக்குழு சார் பில் சோமனூர் பவர் ஹவுஸ் முன்பு திங்களன்று அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவு தினத்தையொட்டி, பிரச்சார இயக்கம் நடைபெற்றது. விசைத்தறி சங்க நிர்வாகி வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், விசைத்தறி சங்க மாவட்டப் பொருளாளர் கே.கோபால், சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், விதொச மாவட்டத் தலைவர் தி.ரவிச்சந்திரன், தென்னை விவசாய சங்க &nbsp;மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விசைத்தறி சங்க மாவட்டத் தலைவர் எஸ்.நடராஜ், மாவட்டச் செயலாளர் எஸ்.ஜோதிபாசு, சிஐடியு தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஜெ.ரவிந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, ஆனைமலை தாலுகா, ஆத்துப் பொள் ளாச்சி கிராமம், கலைஞர் நகர் மற்றும் ஒடையகுளம், அறி வொளி நகர், வாழக்கொம்பு, காளியப்பன் கவுண்டன் புதூர், பொள்ளாச்சி தாலுகா, சிங்காநல்லூர் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், விவசா யத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.துரைசாமி, பொருளாளர் கே.மகாலிங்கம், தாலுகா செயலாளர் கே.ஏ. பட்டீஸ்வமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.