முந்தய பக்கம்

வேலை நிறுத்தம் குறித்து பிரச்சார இயக்கம்

22 Jan 2026, 2:57 pm
வேலை நிறுத்தம் குறித்து பிரச்சார இயக்கம்
<p><strong>வேலை நிறுத்தம் குறித்து பிரச்சார இயக்கம்</strong></p> <p>நாமக்கல், ஜன.22- மத்திய தொழிற்சங்கங்கள் விவசாய சங் கங்கள் இணைந்து பிப்.12 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி குமாரபா ளையத்தில் பஞ்சாலை மற்றும் தையல் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. நூறாண்டுகள் போராடிப் பெற்ற தொழி லாளர் உரிமைகளை பறிக்கும் மோடி அரசின் நான்கு தொகுப்பு சட்டங்களை எதிர்த்து, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான மக்கள் &nbsp;விரோத விவசாயிகள் விரோத கொள்கை களை எதிர்த்து, மத்திய தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் இணைந்து பிப்ரவரி 12 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இதனை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம், நாமக்கல் மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆட்டோ பிரச்சார இயக்கம் புத னன்று குமாரபாளையம் எதிர் மேடு பகுதியில் தொடங்கி, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றடைந்து. பின்னர் வெப்படை நால் ரோடு பகுதியில் பிரச்சாரம் நிறைவு பெற் றது. இந்நிகழ்விற்கு பஞ்சாலை சங்க மாவட் டத் தலைவர் வெங்கடாசலம், தையல் சங்க மாவட்டத் தலைவர் அண்ணாதுரை ஆகி யோர் தலைமை வகித்தனர். ஐசிஎல் சங்க &nbsp;தலைவர் மாணிக்கம் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். பிரச்சாரத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், பஞ்சாலை சங்க மாவட்டச் செயலாளர் தனபால் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram