ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்!
27 Oct 2026, 11:32 pm
<p><strong>ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம்!</strong></p><p>தருமபுரி, அக்.27- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிடக்கோரி, மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் பாலக்கோட்டில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் ஒன்றிய அரசு தனியார்மயமாக்கி, பெரு முதலாளிகளுக்கு தாரை வார்த்து வருகிறது. தமிழ்நாட்டில் தவெக அரசு மின்சாரத்தை தனியார்மயபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. மின்உற்பத்தி திட்டங்கள், மின்வழித்தடங்கள் அமைத்தல் போன்ற திட்டங்களை தனியாரிடம் ஒப்படைக்கின்ற பணிகளை அசுர வேகத்தில் செய்கிறது. தமிழகத்தில்ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே மின்சாரம் என்ற படுபாதக திட்டத்தைஅமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மின் இணைப்புகளில் உள்ள மீட்டரை அகற்றி, புதியதாக ஸ்மார்ட் மீட்டரைதனியார் மூலம் பொருத்துவதை தமிழ்நாடு அரசு, மின்சார வாரியத்தையும் கைவிட வலியுறுத்தி செவ்வாயன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.</p><p>தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கோட்டச் செயலாளர் ஏ.கோவிந்தன் தலைமை வகித்தார். இதில், சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.விஜயன், பொருளாளர் ஆர்.திம்மராயன், கோட்டத் தலைவர் எஸ்.ஆறுமுகம், நிர்வாகிகள் சி.லோகநாதன், பாலகிருஷ்ணன், சகாதேவன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி வெங்கடாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
