கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ அபார வெற்றி!
30 Oct 2026, 9:18 pm

கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தல் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ அபார வெற்றி!

கேரள மாநிலத்தின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் ஆகும்.இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) அனைத்து இடங்களையும் (ஒன்பது) கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. யுடிஎஸ்எப் (ஐக்கிய ஜனநாயக மாணவர் முன்னணி - எம்எஸ்எப்(முஸ்லீம் லீக்) - கேஎஸ்யு (காங்கிரஸ்)) கூட்டணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. படுதோல்வியைச் சந்தித்துள்ளன.

புதிய எஸ்எப்ஐ நிர்வாகிகள்

எஸ்எப்ஐ அமைப்பைச் சேர்ந்த டி.எஸ். தீபக் தலைவராகவும், துணைத் தலைவராக எம். பி. ஷில்பா, பொதுச் செயலாளராக சி.ஆஷிஷ் கிருஷ்ணா, இணைச்செயலாளராக சி.எச்.பாத்திமா பஹ்மா, கலைச் செயலாளராக பி.நிரஞ்சன், மாணவர் இதழாளர் எம். அனீஷா, பொது விளையாட்டு கேப்டனாக ரோஷி ரோஜன் மற்றும் பல்கலைக்கழக யூனியன் கவுன்சிலர்கள் கார்த்திக், பி.கே.நவ்யா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

வன்முறை - வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை யுடிஎஸ்எப் கூட்டணியின் எம்எஸ்எப் அமைப்பின் குண்டர்கள் எஸ்எப்ஐ நிர்வாகி

களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல்நடத்தினர். பல்கலைக்கழக நூலகம் மற்றும்எஸ்எப்ஐ நிர்வாகிகளின் வாகனங்கள் ஆகியவற்றை எம்எஸ்எப் குண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். எஸ்எப்ஐ நிர்வாகிகளும் பதிலடி கொடுக்க அந்த இடத்தை எம்எஸ்எப் குண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். இத்தகைய சூழலில், இந்த மோதலால், பல்கலைக்கழக நிர்வாகம் நவம்பர் 2ஆம் தேதி வரை வகுப்புகளை தற்காலிகமாகநிறுத்தப்படுவதாகவும், விடுதிகளிலிருக்கும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக விடுதிகளைக் காலி செய்ய வேண்டும்என்றும் உத்தரவிட்டுள்ளது.