தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொல்கத்தா உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் திரிணாமுல் காங்கிரசின் ரூ.440 கோடி பண பரிவர்த்தனைக்கு நீதிபதியின் கையொப்பம் முக்கியமாம்!

10 Jul 2026, 8:04 pm
கொல்கத்தா உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் திரிணாமுல் காங்கிரசின் ரூ.440 கோடி பண பரிவர்த்தனைக்கு நீதிபதியின் கையொப்பம் முக்கியமாம்!

கொல்கத்தா உயர்நீதிமன்ற கட்டுப்பாட்டில் திரிணாமுல் காங்கிரசின் ரூ.440 கோடி பண பரிவர்த்தனைக்கு நீதிபதியின் கையொப்பம் முக்கியமாம்!

கொல்கத்தா சமீபத்தில் நிறைவு பெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், 15 ஆண்டுகால ஆட்சியை இழந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையான உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவித்து வருகிறது. 58 எம்எல்ஏக்களுடன் திரிணாமுலை இரண்டாக உடைத்த ரிதாப்ரதா பானர்ஜி (உலுபெரியா பூர்வா எம்எல்ஏ) அதிருப்தி குழு பிதான்நகர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை (சந்திபன் சாகா எம்எல்ஏ மூல மாக) அளித்தது. அதில்,”நாங்கள் தான் உண்மை யான திரிணாமுல் காங்கிரஸ், எங்களது கட்சி கணக்குகள் மம்தா பானர்ஜி கட்டுப்பாட்டில் உள்ளது. கணக்குகளில் உள்ள பணம் குற்றச் செயல்களின் மூலம் திரட்டப்பட்டது” என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனடிப்படையில் கடந்த ஜூன் 19 அன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 3 வங்கிக் கணக்குகளிலும் உள்ள ரூ.440 கோடி வைப்புத் தொகை முடக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வியாழனன்று விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்திற்குப் பின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா,”திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடி வைப்புத் தொகையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரதா தாலுக்தாரை சிறப்பு அதிகாரியாக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இந்த வங்கிக் கணக்குகளை நீதிபதி சுப்ரதா தாலுக்தார் கண்காணிப்பார். இந்த முடக்கப்பட்ட கணக்குகளில் இருந்து வழக்க மான கட்சிச் செலவுகள் மற்றும் நீதிமன்ற வழக்கு செலவுகளுக்கு மட்டுமே நிதியைப் பயன்படுத்த வேண்டும். கட்சியின் ஒவ்வொரு காசோலை யிலும் இந்த சிறப்பு அதிகாரி கூட்டு கையொப்ப மிட்ட பிறகே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்” என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

ரூ.112 கோடிக்கு ஹெலிகாப்டரை வாங்கி கட்சிக்கே வாடகைக்கு விட்ட மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை பிதான்நகர் சைபர் கிரைம் காவல்நிலையம் முடக்க உத்தரவிட்டது என்றாலும், அமலாக்கத்துறை உத்தரவு காரணமாகவே முடக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ‘கேர்வெல் ஏவியேஷன்’ என்ற கொல்கத்தா நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.160 கோடி பணமோசடி செய்துள்ளது தொடர்பாக வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.440.4 கோடியை முடக்குமாறு எச்டிஎப்சி வங்கிக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இந்த ரூ.160 கோடி பணமோசடி நிதியைப் பயன்படுத்தி ‘எம்ப்ராயர் லெகசி 600’ ரக விமானம் மற்றும் ‘அகஸ்டா’ ஹெலிகாப்டர் ஆகியவை ரூ.112 கோடிக்கு வாங்கப்பட்டது. இவை கட்சி நிதியில் வாங்கப்பட்ட போதிலும், பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கே வாடகைக்கு விடப்பட்டதாகவும், 2023இல் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக கேமன் தீவுகளில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.16 கோடி (1.7 மில்லியன் டாலர்) பாதுகாப்பற்ற கடன் பெறப்பட்டதாகவும் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.