தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அறிவியல் கதிர்

21 Nov 2026, 9:23 pm
அறிவியல் கதிர்

அறிவியல் கதிர்

மீன் முட்களில் இருந்து கால்சியம் மாத்திரை - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மிகக் குறைந்த செலவில் மிக அதிக அளவு புரதத் சத்து மீன் உணவின் மூலம் மனிதனுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் உணவாக எடுத்துக்கொள்ளத் தகுதியான நூற்றுக்கணக்கான மீன்கள் இன்று உள்ளன. மீன் மார்க்கெட்டுகள், பதப்படுத்தும் நிலையங்களிலிருந்து உணவு அல்லாத மீனின் 50% உடற்பாகங்கள் கழிவாக வெளித்தள்ளப்படுகின்றன. மீனின் தலை, தோல், முள், செதில்கள், உடல் உட்பகுதிகள் போன்றவை மீன் கழிவுகளில் அடங்கும். கழிவு மேலாண்மை இன்று மிகப்பெரிய சவால்.

மீன் கழிவுகளில் அடங்கியிருக்கும் சத்துகள் பற்றிய ஆய்வுகள் இந்தியாவில் கொச்சி கேரள மீன் வளம் மற்றும் கடல்சார் பல்கலைக்கழக ஆய்வுமையம் உட்பட உலகில் பல இடங்களில் நடந்துவருகின்றன. இதனால் மீன் செல்வத்தை விட அவற்றின் கழிவுகளில் அடங்கியிருக்கும் சத்துகள் கொண்டு விலைமதிப்புமிக்க பொருட்களை தயாரித்து சூழலைக் காக்கமுடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 8118 கிலோமீட்டர். இந்தியாவில் இருந்து 2021-22இல் 13,69,264 மெட்ரிக் டன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு 7.76 பில்லியன் அமெரிக்க டாலர். உலக மக்களின் உணவில் மீன் எந்த அளவுக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

மீன் கழிவில் புரதம், அமினோ அமிலங்கள், உடல் நலத்திற்கு உதவும் கொழுப்பு அமிலங்கள் (PUFA), கரோட்டினாய்டுகள், தாதுக்கள் போன்றவை ஏராளமாக உள்ளன. இவற்றை பயன் தரும்வகையில் நியூட்ராசூட்டில்களாக மாற்றமுடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உணவுப்பொருட்கள் தவிர்த்து உணவாக எடுத்துக்கொள்ளப்படும் பொருட்களில் இருந்து கிடைக்கும் உடல் நலத்திற்கு உதவும் சத்துகள் நியூட்ராசூடில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இவை மனித ஆரோக்கியம், ஆயுள் நீட்டிப்பு மற்றும் பல வாழ்க்கைமுறை நோய்களைத் தடுக்க உதவுகின்றன. நகரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் குறைந்துவரும் பொது மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இவை பெருமளவில் உதவும் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மலிவான விலையில் சத்துள்ள உணவுப்பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்படும்.

மீன் கழிவில் உயிரி செயல் திறன் மிக்க (bioactive) கொலாஜன்கள், ஜலாட்டின்கள், பலதரப்பட்ட ஆண்டி ஆக்சிடெண்ட்டு கூட்டுப்பொருட்கள், கைட்டின் போன்றவை அடங்கியுள்ளன. உயிரி வேதிவினைகள் மூலம் இவற்றை கழிவுகளில் இருந்து பிரித்தெடுத்து உணவுகளிலும், மருந்துகளிலும் பயன்படுத்தமுடியும். மற்ற மூலங்களில் இருந்து கிடைக்கும் பெப்டைடுகளை விட மீன் கழிவிலிருந்து கிடைக்கும் பெப்டைடுகள் பயன் மிகுந்தவை.

அதிக அளவு கிடைக்கும் செம்மீன், நண்டு போன்றவற்றின் தோல் மற்றும் மேலோடு ஆகியவற்றில் கைட்டின், கைட்டோசான் போன்றவை உள்ளன. இதில் கைட்டோசான் புரதங்களின் கருவூலமாகக் கருதப்படுகிறது. முதுமையைத் தடுக்க, இதய நோய், கொலஸ்ட்ரால் போன்றவற்றிற்கு இன்று சந்தையில் கிடைக்கும் கொலாஜன் துணைப்பொருட்கள் (subliments), கைட்டோசான் மாத்திரைகள் உதவுகின்றன.

பறவைகள், விலங்குகள் போன்ற மற்ற உயிரினங்களை விட உணவுச்சங்கிலியில் கீழ்தட்டில் இருக்கும் மீன்களின் உடலில் கன உலோகங்களின் அளவு குறைவு என்பதால் இந்த உயிரினங்களின் முட்களைப் பயன்படுத்தி மருந்து பொருட்களைத் தயாரிக்கமுடியும். கால்சியம் இருப்பதால் இவற்றை கால்சியம் மாத்திரைகளாக மாற்றமுடியும்.

இதன் மூலம் மீனில் இருந்து அதிகம் கழிவாக மாறும் முட்கள் சூழலிற்கு நட்புடைய விதத்தில் பயன்படுத்தமுடியும். இக்கழிவுகளை உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்களாக (food additives), உறைப் பொருட்களாக (encapsulation materials) மற்றும் மக்கக்கூடிய பொட்டலமிடும் பொருட்களாக (biodegradable packaging) மாற்றமுடியும்.

மீன் கழிவில் இருந்து பல் ஆரோக்கியத்திற்கு உதவும் உயிரி வேதித்திறன் மிக்க பெப்டைடுகளை (bioactive dental peptides) தயாரிப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் ஒன்றிற்கும் பயன்படாதவை என்று நாம் தள்ளும் மீன் கழிவுகளை உண்ணத்தகுந்த பொட்டலங்கள் (edible packaging), முப்பரிமாண அச்சிடுதல் (3D printing) போன்ற அதிநவீன துறைகளில் பயன்படுத்துவது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கழிவுகளை மீன் மீலாகவும் (fish meal) பயன்படுத்தலாம். விற்பனை வாய்ப்பு குறைந்த மீன்களின் பதப்படுத்துதலிற்குப் பிறகு கழிவாக வெளியேற்றப்படும் பொருட்களை உலர்த்தி பொடி செய்து தயாரிக்கப்படும் உணவே மீன் மீல் என்று அழைக்கப்படுகிறது. இவை கோழித் தீவனம் மற்றும் கால்நடைத் தீவனத்தில் முக்கியப் புரத மூலம் உள்ள பொருளாகப் பயன்படுகிறது.

வேதிவினைகள் மூலம் மீன் கழிவை இயற்கை உரமாக மாற்றமுடியும். இக்கழிவுகளை உணவாக உட்கொள்ளக்கூடிய மற்றும் உட்கொள்ள முடியாத பல பொருட்களாக பல வேதிமுறைகள் மூலம் தயாரித்து நம்மால் பயன்படுத்தமுடியும். இவை வாழும் நீர் நிலைகளை மாசுபடுத்தாமல் இருந்தால் மட்டுமே மனிதனுக்கு இந்த நன்மைகள் கிடைக்கும். இதை உணராமல் ஏரி, குளம், ஆறு, கடல்களை மனிதன் மாசுபடுத்துவதைத் தொடர்ந்தால் நாளை பூமியில் மீன் என்ற உயிரினமே இல்லாமல் போய்விடும். நீர் நிலைகள் மரணமடைந்தால் மனிதனும் மரணமடைவான்.

ஆக்சிஜன் குறைவைக் காட்டும் அட்லஸ்

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் ஆக்சிஜனின் அளவு குறைந்துவருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இப்பற்றாக்குறை 1% கடற்பரப்பில் மட்டுமே காணப்படுகிறது என்றாலும் இது காலநிலையில் முக்கிய மாற்றங்களுக்குக் காரணமாகும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்கு முக்கியப் பசுமைக்குடில் வாயுவான நைட்ரஸ் ஆக்சைடு மிக அதிக அளவில் காணப்படுகிறது. உலகில் நைட்ரஸ் ஆக்சைடின் 25% உமிழ்விற்கும் கடல்களே காரணமாக உள்ளன.

இவ்வாறு ஆக்சிஜன் குறைவாக உள்ள பிரதேசங்களைப் பற்றி விரிவாக அறிய ஆய்வாளர்கள் அட்லஸ் ஒன்றை தயாரித்துள்ளனர். இது முக்கோணவடிவில் அமைந்துள்ளது. ரோபோட்டுகள் மற்றும் ஆய்வுக்கப்பல்களின் உதவியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடம் குறிப்பிட்ட கடற்பகுதியில் உள்ள ஆக்சிஜன் அளவை அறிய, அதன் மூலம் கடல்களில் நிகழும் மாற்றங்களைப் பற்றி அறிய உதவும்.

வாயு மண்டலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்போது கடலில் ஆக்சிஜனின் அளவு குறைகிறது. ஆனால் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறையாக உள்ள பிரதேசங்களில் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழக(MIT) புவி-வாயுமண்டல கோளாந்திர துறையைச் சேர்ந்த (Department of Earth Atmosphere&Planetory) விஞ்ஞானிகள் தலைமையில் இந்த ஆய்வுகள் நடந்தன.

இது பற்றிய ஆய்வுக்கட்டுரை உலகளாவிய புவி வேதிப்பொருட்கள் சைக்கிள்ஸ் (Global Geochemicals cycles) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்லது. சுற்றுப்புறத்தில் இருக்கும் ஆக்சிஜனை கடல்சார் நுண்ணுயிரிகள் உறிஞ்சி எடுப்பதே இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சராசரி 4000 மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடற்பகுதியில் 35 முதல் 1000 மீட்டர் வரை உள்ள பகுதியிலேயே இந்தப் பற்றாக்குறை காணப்படுகிறது.

இதற்காக கடலில் பல தட்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் நீரில் கலந்திருக்கும் ஆக்சிஜனின் அளவு கண்டறியப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுவதே வழக்கம்.

ஆனால் துல்லியமான முடிவுகளைப் பெற விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளில் நீர் சேகரிக்கப்படும் பாட்டில்களுடன் உணரிகளை இணைத்துப் பயன்படுத்தினர். உயரும் புவியின் வெப்பத்தால் கடல்கள் சூடாகிவரும் நேரத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் கடல்நீரில் அதிகரித்துவருவது உலகக் கடல்கள் மரணமடைவதையே எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.