பசுமை இந்தியா இயக்கத்தில் சிஏஜி அம்பலப்படுத்திய ஊழல்
16 Aug 2026, 9:33 pm

பசுமை இந்தியா இயக்கத்தில் சிஏஜி அம்பலப்படுத்திய ஊழல்

நாட்டின் காடுகளைப் பாதுகாக்கவும், வளப்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘பசுமை இந்தியா இயக்கத்தின்’ (Green India Mission) செயல்பாடுகளில் மிகப்பெரும் குறைபாடுகளும் முறைகேடுகளும் நடந்துள்ளதாகத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிய பாஜக அரசின்வெற்று விளம்பரப் பூச்சுகளை அம்பலப்படுத்தியுள்ளது. தேசிய காலநிலைமாற்றக் கொள்கைத் திட்டத்தின் கீழ் உள்ள எட்டு முக்கிய திட்டங்களில் ஒன்றான இதில், நிதி ஒதுக்கீடு குறைவு, திட்டங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின்மை மற்றும் பலவீனமான கண்காணிப்பு ஆகியவை காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இலக்குகளை அடைவதில் இமாலயத் தோல்வி அடைந்துள்ளதை சிஏஜி அறிக்கை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது.

வனப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற் காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 91.87 சதவீதமும், புதிய காடுகளை உருவாக்குவதில் 97.57 சதவீதமும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது 1.4 மில்லியன் ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட இடத்தில், வெறும்0.11 மில்லியன் ஹெக்டேர் மட்டுமே தரமுயர்த்தப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடுகள் நடந்துள்ளதுடன், எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முறையான கணக்குகளைப் பராமரிக்கவில்லை என்பதும்தெரியவந்துள்ளது. கம்பா (CAMPA) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் ஏற்பட்ட தொய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களை முடக்கியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, புள்ளிவிவரங்களை வைத்து மோசடி செய்யும் கார்ப்பரேட் சார்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஒன்றியஅரசு குறியாக உள்ளது. எதிர்காலத் தலைமுறையின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான வன வளங்களைப்பாதுகாக்கத் தவறியதுடன், நிதி முறைகேடுகளுக்கும் நிர்வாகத் திறமையின்மைக்கும் ஒன்றிய அரசே முழுப்பொறுப்பாகும்.

இந்த மோசடித்தனமான திட்டங்களின் மூலம் சுற்றுச்சூழல் துறையில் கோடிக்கணக்கான ரூபாய் நிதியைப் பாழடித்திருப்பது தேசத்திற்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத துரோகமாகும். ஆவணங்களில் மட்டுமே பசுமையை வளர்த்துவிட்டு, களத்தில் வனங்களை அழிக்கும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுபெருநிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அரசின் முகமூடி இதன் மூலம்கிழிந்துள்ளது.

வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மாறிப்போன இத்தகைய இயக்கங்கள் மூலமாகக் காடுகளைப்பாதுகாக்க முடியாது என்பதை சிஏஜி அறிக்கைதெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான திட்டமிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததன் காரணமாகவே நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாகப் பின்தங்கிவிட்டன. மக்களின் வரிப்கணத்தை முறைகேடாகச் செலவழித்துவிட்டு, வெற்றுவிளம்பரங்கள் மூலம் எதார்த்தத்தை மறைக்க முயலும் ஒன்றிய அரசின் மக்கள் விரோத, சுற்றுச் சூழல் விரோதப் போக்கை முறியடிக்க குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.