தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கட்டண சேனல்களின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாட்டில் தீர்மானம்!

2 Nov 2026, 10:46 pm
கட்டண சேனல்களின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாட்டில் தீர்மானம்!

கட்டண சேனல்களின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாட்டில் தீர்மானம்!

திருச்சிராப்பள்ளி, நவ. 2 –தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல

சங்கத்தின் 23-வது மாநிலப் பொதுக்குழு மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்குச் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப. வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் பி. விஷ்ணுவர்த்தன் வரவேற்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் எஸ். குமரேசன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.

தீர்மானங்கள்

மாநாட்டில், ஒன்றிய அரசும் ஒழுங்குமுறை ஆணையமும் கட்டண சேனல்களின் கட்டணத்தைக் உடனடியாகக் குறைக்க வேண்டும் என்ற முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், கேபிள் டிவி வணிகத்திற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்குத் தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, வேலை மற்றும் அமைப்பு அறிக்கையை மாநிலச் செயலாளர் எஸ். ராதாகிருஷ்ணனும், வரவு-செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் ஆர். கோவர்த்தனனும் வாசித்தனர். பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் மற்றும்மாநிலத் துணைத் தலைவர் பி. ஆர். தணிகைவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். `தடைகளை உடைத்து வெள்ளி விழாவை நோக்கி’ என்ற தலைப்பில் நிறுவனத் தலைவர் பி. சகிலன் உரையாற்றினார். கௌரவத் தலைவர் ஏ. சலீம், தலைமை நிலைய செயலாளர் எஸ். பி. அப்சர் ஆகியோரும்உரையாற்றினர்.

வரும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற உள்ள வெள்ளிவிழா மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக பி. சகிலன், கௌரவத் தலைவர்களாக பி. வி. கல்யாண சுந்தரம், ஜாக் ஜெயராமன் மற்றும் துணை நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள், மாநிலச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருச்சி மாவட்டத் தலைவர் ஜி. வெங்கடேஷ் நன்றி கூறினார். (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.