தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தகவல்

3 Aug 2026, 8:18 pm
மோடி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தகவல்

மோடி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் ‘சி-வோட்டர்’ கருத்துக்கணிப்பில் தகவல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனையைத் தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்ற மாணவர்கள் - இளைஞர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்ததால்,ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் சூழல் உருவானது. இதனால் பதற்றமடைந்தபிரதமர் மோடி வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அறிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்வுகள் சட்டத்தில் மோடி அரசு திருத்தம்கொண்டு வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஒன்றிய மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து ‘சி-வோட்டர்’ நிறுவனம் அவசரகருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், மோடி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என தகவல்வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்காளர்களில்(பாஜக ஆளும் மாநிலங்களில்) 5 பேரில் 2 பேர், அதாவது பெருமளவிலான வாக்காளர்கள் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றியஅரசின் நடவடிக்கைகளில் திருப்தியடையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், போராட்டத்தின் போது தில்லிகாவல்துறை நடத்திய அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக கூட்டணியின்ஆதரவாளர்களில் 58 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் கரப்பான்பூச்சி ஜனதாகட்சி நடத்தும் போராட்டங்களுக்கு சுமார்38 சதவீதம் கூட்டணி வாக்காளர்கள் ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளனர் என ‘சி-வோட்டர்’ கருத்துக் கணிப்பில்தகவல் வெளியாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.