முந்தய பக்கம்

சி. விஜயபாஸ்கரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

16 Jun 2026, 10:31 pm
சி. விஜயபாஸ்கரும் எம்எல்ஏ  பதவியை ராஜினாமா செய்தார்!

சி. விஜயபாஸ்கரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

சென்னை, ஜூன் 16 - பதவியை ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் களின் வரிசையில், அதிமுக முன் னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கரும் இணைந்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரான அவர், செவ்வாயன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும், சி. விஜயபாஸ்கரின் ராஜினாமா கடிதம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவித்துள்ளார்.

இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 47-இல் இருந்து 42 ஆக குறைந்துள்ளது.

ஏற்கெனவே, அதி​முக சட்டமன்ற உறுப்பினர்களான மர கதம் குமர​வேல் (மது​ராந்​தகம்), ஜெயக்​கு​மார் (பெருந்​துறை), சத்​தி​ய​பாமா (தா​ராபுரம்), இசக்கி சுப்​பையா (அம்​பாச​முத்​திரம்), ஆகியோர் தங்​கள் பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​திருப்பது குறிப்பிடத்தக்கது.

சி.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதியில் கடந்த 2011 முதல் 2026 வரை தொடர்ந்து நான்காவது முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். 2013 முதல் 2021 வரை தமிழக சுகாதாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram