தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் ஐக்கியம்!

1 hour before
முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர்,  எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் ஐக்கியம்!
<p><strong>முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவெகவில் ஐக்கியம்! </strong></p><p>சென்னை, ஜூலை 2 - அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர், ஆளும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், அக்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் பிளவு ஏற்பட்டு, ஒரு தரப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணியாகச் செயல்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், 25 பேரின் எம்எல்ஏ பதவி பறிபோகும் அபாய த்தை எதிர்கொண்டனர். பின்னர், தந்திரமாக மன்னிப்புக் கடிதம் அளித்து, தங்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வைத்தனர். தற்போது வரிசையாக, அதிமுக-வில் இணைந்து வருகின்றனர். ஏற்கெனவே, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் ஆகிய நான்கு எம்எல்ஏ-க்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்து அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்களும் தற்போதைய அதிமுக எம்எல்ஏ-க்களுமான சி. விஜயபாஸ்கர் (விராலிமலை) மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும், ஏற்கெனவே தமது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்த நிலையில், வியாழக்கிழமையன்று காலை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெகவில் இணைந்தனர். இவர்களுடன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி ஆகியோரும், தவெக பொதுச்செயலாளர் - அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர். புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்களும் இவர்களுடன் தவெகவில் இணைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.